சென்னை முதலிடம்: மடிக்கணனிகள் அதிகளவில் வழங்கப்பட்ட மாவட்டங்களின் வரிசையில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில் 2,16,715 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 92,822 பேருக்கும், மதுரையில் 1,59,288 பேருக்கும், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி, சேலம், விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கடலூர், திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெரம்பலூரில் குறைந்தபட்சமாக 24,727 பேருக்கும், நீலகிரி, அரியலூர், கரூர், தேனி, ராமநாதபுரம், திருவாலூர், சிவகங்கை, நாமக்கல், தருமபுரி, புதுக்கோட்டை, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் குறைவான மாணவ-மாணவியருக்கும் மடிக்கணினிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மின் விசிறி-கிரைண்டர்-மிக்ஸி திட்டம்: தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் விசிறி-கிரைண்டர்-மிக்ஸி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 19,30,410 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கோவை, வேலூரில் தலா 9 லட்சமும், விழுப்புரம், சேலத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமானோருக்கும், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானோருக்கும் வழங்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 1,52,984 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.








