பி.எட். படிப்பில் சேர ஓரிரு நாளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு:
பி.எட். மாணவர் சேர்க்கையில் இந்த
ஆண்டுதான் முதல்முறையாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. தரவரிசைப்
பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர்
சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பி.எட். படிப்பில் சேர 1,113 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) புதிய
விதிமுறையின்படி பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகள் சேரலாம். அந்த
வகையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல்
கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 1,113 பொறியியல் பட்டதாரிகள் உள்பட 7,425
பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், பி.எட் கட் ஆப் மதிப்பெண் பட்டியல்
19-ம் தேதி வெளியிடப்பட்டது. பொது கலந்தாய்வு வருகிற 28 ஆம் தேதி தொடங்கி
அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையே, தரவரிசைப் பட்டியல்
(ரேங்க் லிஸ்ட்) இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு
பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதி தெரிவித்தார்.








