தமிழக்கத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மாணவர் சமுதாயத்தின் மத்தியில் பெரிய அளவில் எழுச்சியை ஏற்படுத்தியர். மாணவ, சமுதாயத்தினர் மத்தியில் இந்தியாவின் வல்லரசு கனவை ஒளியேற்றியவர் என்ற சிறப்புக்களை பெற்றவர், அணு விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம்.
இது குறித்து, சேலம் சிற்பி பழனிசாமி கூறியதாவது:தெய்வ சிலை, தலைவர்களின் சிலைகள், விலங்குகள், பறவைகளின் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தோம். தற்போது அப்துல்கலாமின் சிலைகளுக்கு அதிக அளவில் ஆர்டர் வரத்துவங்கி உள்ளது. வாழும் போதும், இறந்த பின்னரும், மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பெற்று விட்ட அப்துல்கலாம், தற்போது சிற்பக்கலைக்கூட சிற்பிகளின் வாழ்வில் ஒளியேற்ற துவங்கி உள்ளார். கல்வி நிலையங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அப்துல்கலாம் சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். இதில், எங்கள் தொண்டும் இருக்க வேண்டும் என்ற வகையில், பிற சிலைகளை விட, அப்துல்கலாம் சிலைகளுக்கு, 25 சதவீதம் வரை, தள்ளுபடி செய்து விற்கிறோம்.மாணவர்கள் கல்வி நிஙலையங்களின் அனுமதியை பெற்று சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். ஆர்டர் கொடுக்கும் சிலைகளுக்கு மட்டுமின்றி, தயார் நிலையிலும் சிலைகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். இதில், 1,500 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








