இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம் பேருக்கு உடல் தகுதித் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 11 இடங்களில் கடந்த மாதம் 3,4,5-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 2,100 பேருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இவர்களுக்கு நேர்முகத் தேர்வு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்.3) தொடங்கியது. இதில் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 50 பேர் பங்கேற்றனர். இவர்களிடம் சீருடை வாரிய அதிகாரிகள் நேர்முகத் தேர்வை நடத்தினர்.
இவ்வாறு தினமும் 50 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு, அடுத்தக் கட்டமாக மருத்துவ சோதனை செய்யப்படுகிறது. மருத்துவத் தகுதி பெறுகிறவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.








