விழுப்புரத்தில் இ.இ.ஜி.டெக்னீசியன் பணிக்காலியிடத்துக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் டாக்டர் செ.மணி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மருத்துவப் பணிகள் இயக்குநர் அறிவித்துள்ள
இ.இ.ஜி (உப்ங்ஸ்ரீற்ழ்ர் உய்ஸ்ரீங்ல்ட்ஹப்ர்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீ) தொழில்
நுட்பபணியாளார் பணிக் காலியிடத்துக்கான பதிவு மூப்பு விவரங்கள்
சரிபார்க்கப்பட உள்ளது. பணிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி
பெற்று, சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரால் இ.இ.ஜி அல்லது
தசைமின்னலைவரவி(உப்ங்ஸ்ரீற்ழ்ர்ம்ஹ்ர்ஞ்ழ்ஹல்ட்ஹ்) ஆகியவற்றுக்கான ஓராண்டு
படிப்புக்கான சான்றிதழ் பெற்றிருந்தல் வேண்டும். வயது வரம்பு பொது
பிரிவினருக்கு ஜூலை 1-ம் தேதி 30 வயது, இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு
கிடையாது.
மேற்கண்ட கல்வித் தகுதி பெற்றுள்ள பதிவுதாரர்கள்
அனைவரும் தங்களது பதிவு விவரங்களை அசல் கல்விச் சான்றுகளுடன் வரும்
செப்டம்பர் 10-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில்
ஆஜராகி சரிபார்த்துக் கொள்ளலாம் என்றார்.








