Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அனைத்து வசதிகளும் கொண்ட அழகான மருத்துவக்கல்லூரி ஓமந்தூரார் மருத்துவக்கல்லூயில் சேர்ந்த மாணவிகள் பாராட்டு:
அனைத்து வசதிகளும் கொண்ட அழகான மருத்துவக்கல்லூரி ஓமந்தூரார் மருத்துவக்கல்லூயில் சேர்ந்த மாணவிகள் பாராட்டு:
அனைத்து வசதிகளும் கொண்ட அழகான மருத்துவக்கல்லூரி என்று ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவிகள் தெரிவித்தனர்.
விழாக்கோலம்
சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனை அருகே ஓமந்தூரார் அரசு
மருத்துவக்கல்லூரி என்று பெயரிடப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள
மருத்துவக்கல்லூரியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் நேற்று
திறந்து வைத்தார்.
அவர் திறந்து வைத்த அதே நேரத்தில் ஓமந்தூரார் அரசு
மருத்துவக்கல்லூரி வளாகம் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. கல்லூரியின்
முதல்வர் டாக்டர் சாந்தி மலர் மற்றும் ஏராளமான டாக்டர்கள், கல்லூரி மாணவ,
மாணவிகள் கலந்துகொண்டனர்.
மருத்துவக்கல்லூரியை ஜெயலலிதா திறந்து
வைத்ததும், ஜெயலலிதாவுக்கு மாணவி அர்ச்சனா நன்றி தெரிவித்து காணொலி
காட்சியில் பேசினார். பின்னர் மருத்துவக்கல்லூரி புதிதாக
திறக்கப்பட்டதையொட்டி மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாந்தி மலர்
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். முன்னதாக
டாக்டர்கள் மற்றும் மாணவிகள் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
ஜெயலலிதாவுக்கு நன்றி
பின்னர் மாணவி அர்ச்சனா கூறியதாவது:–
நான் திருவாலங்காடு
அருகே சின்னமாபேட்டையை சேர்ந்தவள். எனது தந்தை மோகன்தாஸ், தாய் தனலட்சுமி.
எனக்கு ஓமந்தூரார் மருத்துவக்கல்லுரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்ததை
எண்ணி பெருமை அடைகிறேன். காரணம் நான் இந்த மருத்துவக்கல்லூரியில் முதல்
செட் மாணவி. இங்கு கல்லூரி முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்டுள்ளது.
கல்லூரியை சுற்றி பார்த்தேன். வகுப்பறை, ஆய்வுக்கூடம் உள்பட அனைத்தும்
அழகாகவும் நேர்த்தியாகவும் கட்டப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட
மருத்துவக்கல்லூரியை திறந்துவைத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி
தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மாணவி அர்ச்சனா தெரிவித்தார்.
மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாந்தி மலர் கூறியதாவது:–
ஓமந்தூரார்
மருத்துவக்கல்லூரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய
மருத்துவக்கவுன்சில் விதிமுறையின் படி அனைத்து வசதிகளும் இந்த
மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 இடங்களுக்கு 96
மாணவ–மாணவிகள் சேர்ந்துள்ளனர். 3–வது கட்ட மருத்துவ கலந்தாய்வு
நடக்கும்போது மீதம் உள்ள 4 இடங்களும் நிரம்பி விடும்.
இத்தனை
வசதிகொண்ட மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்த முதல்–அமைச்சர்
ஜெயலலிதாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு டாக்டர் சாந்தி மலர் தெரிவித்தார்.
அழகான மருத்துவக்கல்லூரி
மாணவிகள் கூறுகையில் ‘அனைத்து வசதிகளும் கொண்ட அழகான
மருத்துவக்கல்லூரியாக ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி விளங்குகிறது’ என்று
தெரிவித்தனர். பார்வையாளர்கள் கூறுகையில் ‘ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி
கட்டிடம் சிறப்பாக உள்ளது. இனி பராமரிப்பதன் மூலம்தான் மருத்துவக்கல்லூரி
கட்டிடத்தை நன்றாக வைத்திருக்கமுடியும்’ என்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








