செவிலிய பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு புதன்கிழமை (செப்.2) நிறைவடைய உள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 639 இடங்கள் பூர்த்தியாகின. தமிழகத்தில் உள்ள அரசு செவிலிய பட்டயப் படிப்பு கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கியது. அரசு செவிவிய பட்டயப் படிப்பு கல்லூரிகளில் உள்ள 2,000 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற கலந்தாய்வில் 632 இடங்கள் நிரம்பின.சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 639 இடங்கள் பூர்த்தியாகின. தமிழகத்தில் உள்ள அரசு செவிலிய பட்டயப் படிப்பு கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கியது. அரசு செவிவிய பட்டயப் படிப்பு கல்லூரிகளில் உள்ள 2,000 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க பொதுப்பிரிவைச் சேர்ந்த 894 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. 640 மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் 639 இடங்கள் நிரப்பப்பட்டன.
இரண்டு நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 1,271 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. மீதம் உள்ள 729 இடங்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.







