மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேர்வு நடவடிக்கையை எதிர்த்து வழக்கு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேர்வு நடவடிக்கையை எதிர்த்து வழக்கு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேர்வு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி பல்கலைக்கழகம் மானியக்குழுவுக்கு, நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பாடம் ஏ.நாராயணன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
நேர்மையான தேர்வு
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில், மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் நடக்கின்றன. இதுகுறித்து கடந்த 2012–ம் ஆண்டு, தமிழக கவர்னரிடம் கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் உள்பட பலர் புகார் மனு கொடுத்துள்ளனர். அப்போது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த விவரங்களை குறிப்பிட்டு, இந்த முறைகேட்டில் தொடர்புள்ளவர்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தன.
எங்களை பொறுத்தவரை கல்வி நிறுவனத்தின் உயர் பதவியான துணைவேந்தர் பதவிக்கு, வெளிப்படையான, நேர்மையான முறையில் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.

குளறுபடி
இந்த நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் பதவிக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்ய ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வுக்குழு வெளிப்படையான நடவடிக்கைகளின் அடிப்படையில் துணைவேந்தர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வுக்குழு கடந்த மே மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளது. இந்த தேர்வு நடவடிக்கையில் பல குளறுபடி நடந்துள்ளது. அதாவது, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 10 ஆண்டு பேராசிரியராக பணியாற்றி இருக்கவேண்டும். குற்ற வழக்கில் தொடர்பு இல்லாதவர்களாக இருக்கவேண்டும். ஆனால், இந்த 2 நிபந்தனைகளை குறிப்பிடாமல், துணைவேந்தர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.
நோட்டீசு
எனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கடந்த மே 31–ந் தேதி வெளியிட்ட விளம்பர அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். அந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.
பல்கலைக்கழகம் மானியக்குழு விதிகளின்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்யவேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகம் மானியக்குழு (யு.ஜி.சி.) தலைவர் உள்ளிட்டோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H