நல்லொழுக்கம் போதிக்கும்
ஞானி நீ ....!!
பாங்காய் செதுக்கும்
சிற்பி நீ ......!!
அறிவுரை புகட்டி ஆதரிக்கும்
ரட்சகன் நீ ....!!
சொல்லாலடித்தாலும் கடமை தவறா
கர்ம வீரன் நீ ....!!
ஏணிப் படிகளாய் ஏற்றுவித்து
கீழிருந்து அழகு பார்க்கும் குணாளன் நீ ...!!
முள்ளாய்க் குத்தினாலும்
தாயாய் மன்னிக்கும் தயாளன் நீ ....!!
படிப்பில் பிடிப்பை ஏற்படுத்தும்
சாதகன் நீ......!!
சாரதியாய் வழிகாட்டி ஒளிகாட்டும்
கலங்கரைவிளக்கம் நீ ...!!
அகில அரங்கில் நிலை நாட்டும்
போதி விருட்சம் நீ ...!!
தன்னலமில்லா உழைப்பைத் தரும்
தர்மவான் நீ ....!!
கருவறைத் தெய்வங்களே ...
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி
தொழுகின்றோம் ....!! -நும்
பணி சிறக்கட்டும் ...
வாழிய ....பல்லாண்டு ....பல்லாண்டு ..... !!! அனைத்து ஆசிரிய தோழர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதிலே பெரு மகிழ்ச்சி அடைகிறேன்்.....








