ராஜஸ்தானில், பக்ரீத் பண்டிகையின்போது, பள்ளி, கல்லுாரிகளில், ரத்த தான
முகாம் நடத்துமாறு, அரசு உத்தரவிட்டுள்ளதால், புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.பா.ஜ., ஆளும் மாநிலங்களில், ஜெயின் பண்டிகைக்காக, இறைச்சிக்கு
விதிக்கப்பட்ட தடைக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், ராஜஸ்தானில், வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., அரசு, 25ம்
தேதி, பள்ளி, கல்லுாரிகளில், ரத்த தான முகாம் நடத்தஉத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின், மறைந்த தலைவர், தீன் தயாள் உபாத்யாயாவின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில்,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே
நாளில் தான், முஸ்லிம் பண்டிகைகளில் ஒன்றான, பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம், பொது விடுமுறை அளிக்காததற்கு, முஸ்லிம்கள் கடும் கண்டனம்
தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, மத நல்லிணக்கம்
மற்றும் ஜனநாயக அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் சலீம் கூறுகையில்,
''ராஜஸ்தான் மாநில அரசின் நடவடிக்கை, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது;
பாசிசப் போக்கை, மாநில அரசு கடைபிடித்து வருகிறது,'' என்றார். இதற்கு பதில்
அளிக்கும் வகையில், முஸ்லிம் ஆசிரியர்கள் விருப்பப்பட்டால், 25ம் தேதி
விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விளக்கம், அரசு உத்தரவில் காணப்
படவில்லை என, முஸ்லிம் அமைப்புகள் சுட்டிக்
காட்டுகின்றன.







