செப்.26 முதல் அக்.4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.பள்ளிக்
கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப்
பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இப்போது காலாண்டுத் தேர்வு
நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 26 முதல் காலாண்டு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் அக்டோபர் 5-ஆம் தேதி
திறக்கப்படுகின்றன. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில்
உள்ளது. அதன்படி, இரண்டாம் பருவம் அக்டோபர் மாதம் தொடங்கும். இந்தப்
பருவத்துக்கான புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என
அதிகாரிகள் தெரிவித்தனர்.







