ஆராய்ச்சி போட்டி
இங்கிலாந்து நாட்டின் ஆம்ஸர்டாம் நகரை தலைமை இடமாக கொண்டு ‘ஆர்எல்இஎக்ஸ் குரூப்’ நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் பெருகி வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், சுகாதாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கான 2015 குரூப் என்விரோமெண்டல் என்ற போட்டியை அறிவித்திருந்தது.
வி.ஐ.டி. மாணவிக்கு
ரூ.16 லட்சம் பரிசு
இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாணவி டெவிலினாதாஸ் சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக்கி, அதனை வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் வினியோகம் செய்வதற்கான ‘சலினோ’ என்கிற புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.
இந்த புதிய கண்டுபிடிப்பில் சூரிய ஒளி சக்திக்காக பயன்படுத்தப்படும் பேனல் உள்ளிட்ட கருவிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக போட்டியை நடத்தும் குழுவினர் இந்த சலினோ ஆராய்ச்சியை 2-வது இடத்திற்கு தேர்வு செய்து அதற்கு பரிசு தொகையான 25 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கி பாராட்டியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.16 லட்சம் ஆகும்.
இங்கிலாந்தில் நடந்த போட்டியில் ரூ.16 லட்சம் பரிசு பெற்ற மாணவி டெவிலினாதாசை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.








