குவைத் நாட்டு வேலைவாய்ப்பு:
செப்.19-இல் நேர்காணல்:குவைத் நாட்டில், கனரக வாகன ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு வருகிற
சனிக்கிழமை (செப்.19) நடைபெறும் நேர்காணலில் விருப்பமுள்ளவர்கள்
பங்கேற்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: குவைத்
நாட்டில், இந்தியத் தொலைத்தொடர்புத் திட்டப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு
செய்யப்படவுள்ளனர். அதாவது கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதல்
தொடர்பில் அனுபவம் பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். எட்டாம் வகுப்புத்
தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குவைத் ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களும் தேவைப்படுகிறார்கள்.இந்திய
கனரக ஓட்டுநர் உரிமம், ஜிசிசி கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள்
மேற்குறிப்பிட்ட பணிக்குத் தகுதியானவர்களாவர். இருப்பினும், குவைத்
நாட்டில் கனரக ஓட்டுநர் உரிமம் பெறும் வரை லேபராக பணிபுரிய வேண்டும்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30 மாதங்களுக்கு செல்லத்தக்க கடவுச்
சீட்டு, சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம் ஆகியவற்றின்
இரண்டு நகல்கள், நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன்
சனிக்கிழமை (செப்.19) காலை 9 மணிக்கு எண் 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க.
தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசின்
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில்
பங்கேற்கலாம்.







