பின்னணி: தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கட்டணம், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு குழு, 2013, செப்டம்பரில் அறிவித்தது. இதை எதிர்த்து, தனியார் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், "தமிழக அரசின் சட்டத்துக்கு தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் கட்டுப்பட வேண்டும்' என 2013, செப்டம்பர் 21-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தனியார் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.