கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர் அமைப்பின் தேர்தல் நடத்துவது தொடர்பாக, யு.ஜி.சி., சில கட்டுப்பாடுகளை விதித்தது.மத்திய மனிதவளத் துறை அமைத்த 'லிண்டாக்' குழுவின் பரிந்துரைப்படி, இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி, பிரச்னை ஏற்படாத வகையில், துண்டு பிரசுரங்கள் மூலம் பிரசாரம் செய்யலாம்.
இந்த வழக்கில், 'அதிகளவு காகிதங்களை பயன்படுத்தும்போது, அந்த காகிதங்களை மீண்டும் தயாரிக்க, ஏராளமான மரங்களை அழிக்க வேண்டியுள்ளது. எனவே, கல்லுாரிகளில், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாணவர் அமைப்பு தேர்தலில், சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போன் மூலம் பிரசாரம் செய்யலாம்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, யு.ஜி.சி., அதிகாரி ஒருவர் கூறும்போது, 'ஏற்கனவே காகிதம் மற்றும் புத்தக பயன்பாட்டை குறைத்து, 'இ - லேர்னிங்' எனப்படும், மின்னணு முறையில் படிப்பது குறித்த புதிய திட்டங்களை, யு.ஜி.சி., மேற்கொண்டு வருகிறது.








