பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் என்.சி.சி., மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் செப்டம்பரில், டில்லியில் பயிற்சி நடத்தப்படும். நாடு முழுவதுமிருந்து, தலா, 640 மாணவர், மாணவியர் பங்கேற்பர்.இந்த ஆண்டு நடந்த, 10 நாள் பயிற்சியில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த தமிழக மண்டலத்திலிருந்து, தலா, 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பயிற்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட போட்டிகளில், தமிழக மண்டல மாணவர்கள், 10 பதக்கங்களை பெற்றனர். பயிற்சி முடித்து, நேற்று, சென்னை திரும்பிய மாணவ, மாணவியருக்கு
பாராட்டு விழா, சென்னை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது.








