Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கை முடிக்க 6 மாதம் அவகாசம் கோரிய சென்னை ஐகோர்ட்டு கோரிக்கை ஏற்பு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி:
சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கை முடிக்க 6 மாதம் அவகாசம் கோரிய சென்னை ஐகோர்ட்டு கோரிக்கை ஏற்பு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி:
கடந்த 2008–ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட
சம்பவம் தொடர்பான வழக்கை முடிக்க மேலும் 6 மாத காலஅவகாசம் தேவை என்ற சென்னை
ஐகோர்ட்டின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று அனுமதித்தது.
பொதுநல மனு
கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 12–ந் தேதி நடைபெற்ற சம்பவத்தில்
தேர்வு எழுதச் சென்ற சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் கொடூரமாக
தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவம்
குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உலக மனித உரிமை
ஆணையம் மற்றும் மீட்பு மையம் சார்பில் சரவணன், கருப்பசாமி மற்றும்
எஸ்.பிரபாவதி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் 14–ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் கூறியதாவது:–
ஓராண்டுக்குள் விசாரணை
சென்னை ஜார்ஜ் டவுன் 7–வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம்,
சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மீது நிகழ்ந்த தாக்குதல் தொடர்பான வழக்கு
விசாரணையை விரைந்து நடத்தி ஓராண்டு காலத்துக்குள் முடித்து வைக்க வேண்டும்.
2 மாதங்களுக்கு ஒரு முறை வழக்கு விசாரணையின் நிலை குறித்த தகவலை சென்னை
ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். ஐகோர்ட்டு வழக்கின் முன்னேற்றத்தை
நேரடியாக கண்காணிக்க வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே
கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாலும், குற்றம்
சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு
இருப்பதாலும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய தண்டனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும்
இதன் மீது சி.பி.ஐ. விசாரணை அல்லது சிறப்பு புலனாய்வு விசாரணை எதுவும்
தேவையில்லை.
இவ்வாறு இந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
6 மாதம் அவகாசம்
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வெளியாகி ஓராண்டு
நிறைவு பெற்ற நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்
டி.எஸ்.தாக்கூர் மற்றும் கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த
வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர்
சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் தனஞ்ஜெயன் ஆஜராகி பல்வேறு காரணங்களால்
வழக்கின் விசாரணை தாமதப்படுவதாகவும், வழக்கை முடிக்க மேலும் 6 மாத
காலஅவகாசம் தேவை என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை
ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கீழ் கோர்ட்டு இந்த வழக்கு மீதான விசாரணையை
மேலும் 6 மாத கால அவகாசம் எடுத்து முடிக்க வேண்டும் என்றும், இதுகுறித்த
அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு
பிறப்பித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








