கல்லூரிக் கல்வி இயக்குநராக பேராசிரியர் தேவதாஸ் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக இருந்த பேராசிரியர் சேகரை தமிழக அரசு நியமித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவதாஸ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழைய நிலையே நீடிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் 30-ஆம் தேதி தேவதாஸ் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, பேராசிரியர் சேகரை மீண்டும் இயக்குநர் பதவிக்கு தமிழக அரசு நியமித்தது. புதன்கிழமை மாலை அவர் அந்தப் பொறுப்பை மீண்டும் ஏற்றார்.
இந்த நியமனம் குறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது: கல்லூரிக் கல்வி இயக்குநராக முன்பு பணியாற்றி வந்த பேராசிரியர் தேவதாஸýம், இப்போது பதவியேற்றுள்ள சேகரும் முழு நேர இயக்குநர்களாக அல்லாமல், முழுக் கூடுதல் பொறுப்பிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களால் விரைவான முடிவுகள் எடுக்க முடியாததோடு, பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, வரும் காலங்களில் முழு நேர இயக்குநர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.








