மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், 1,800 காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். காலி பாட்டிலில், குழைவாக்கப்பட்ட மண் நிரப்பி, செங்கல் போல் அடுக்கி சுற்றுச்சுவர் எழுப்பினர்.
'டிசைன் பார் சேஞ்ச்' இந்தச் சுவர் தான், செயல்வழி கற்றல் திட்டத்தில், நம் நாட்டில், முதல் பரிசையும்; உலக அளவில், வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோ வில் நடைபெற்ற மாநாட்டில், முதல் ஐந்து இடங்களுக்குள் தேர்வாகி, பரிசு பெற்றுள்ளது.
ஆசிரியை சசிரேகா மற்றும் மாணவியரின் பிரதிநிதியாக, ஏழாம் வகுப்பு மாணவி மேகதர்ஷினி ஆகியோர் மெக்சிகோவுக்கு அழைக்கப்பட்டு, பாராட்டப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப் பாளர் உமா மகேஸ்வரி கூறியதாவது: செயல்வழி கற்றல் திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 40 ஆசிரியர்கள், தனித்தனியே திட்டங்கள் மேற்கொண்டனர்.
'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு, தேசிய அளவில், ஆமதாபாத்தில் நடத்திய போட்டியில், ஆச்சி மங்கலம் பள்ளியின் பிளாஸ்டிக் பாட்டில் சுற்றுச்சுவர் திட்டம், தேசிய அளவில் முதல் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய் பெற்றது. பின், மெக்சிகோவுக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த திட்டக் குழுவினரை, கல்வி அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா மற்றும் அதிகாரிகள் அழைத்து பாராட்டினர்.








