கடல் தந்த நோபல் பரிசு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கடல் தந்த நோபல் பரிசு:

நம்நாட்டில் சர் சி.வி.ராமனை தெரியாத பள்ளி மாணவர்களை கண்டுபிடிப்பது அரிது. இவர் ஒரு அறிவியல் மேதை. ஒளிச் சிதறல் என்ற கோட்பாடு இவரை நோபல் பரிசுக்கு தகுதியாக்கியது. சர் சி.வி. ராமன் நம்நாட்டிலே படித்து, இங்கேயே ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இந்தியா அறிவியல் ஆய்வுக்கு ஏற்ற இடமல்ல என்ற மாயையை உடைத்தவர். ராமன் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் உள்ள திருவானைக்காவலில் 1888, நவம்பர் 7-ம் தேதி, சந்திரசேகர்- பார்வதி தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது முழுப்பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். இவருடைய தந்தையும் கணிதம் மற்றும் இயற்பியலில் பேராசிரியராக இருந்தார். ராமனுக்கு இயற்பியல் மீது ஆர்வம் வர அவர் தந்தையும் ஒரு காரணம்.
பள்ளிப்படிப்பை முடித்த ராமன் கல்லூரி படிப்புக்காக சென்னை பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். முதல் வகுப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றதால் அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 16. 1907-ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார். அப்போதே அவர் ஒளி, ஒலி ஆராய்ச்சிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மேலும் அறிவியல் படிப்பை தொடர வேண்டும் என்றால் வெளிநாடுகளுக்கு தான் செல்லவேண்டும் என்ற நிலை. அன்றைக்கு அறிவியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடையாது. அதனால் மேற்கொண்டு படிக்காமல் ஒரு நிதி நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக வேலைக்கு சேர்ந்தார்.

அந்த வேலையைப் பார்த்துக்கொண்டே கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் படிப்பை தொடர்ந்தார். கூடவே ஒலி அதிர்வுகள் பற்றியும், இசைக் கருவிகளின் கோட்பாடு பற்றியும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவரது அறிவியல் ஆர்வத்தைக் கண்டு கொல்கத்தா பல்கலைக்கழகம் 1917-ல் இவருக்கு இயற்பியல் பேராசிரியர் வேலையைக் கொடுத்தது.

அங்கு இவர் பணியாற்றிய 16 ஆண்டு காலம் இவரது ஆய்வின் பொற்காலம் என்று சொல்லலாம். 1926-ல் இந்திய இயற்பியல் வெளியீடு என்ற பத்திரிகையை தொடங்கி, இவரது படைப்புகளை அதில் இடம் பெறச் செய்தார். 1928-ல் இந்திய அறிவியல் பேரவையின் தலைவராக ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய பிரிட்டிஷ் அரசு ராமனின் விஞ்ஞானப் படைப்புகளை பாராட்டி ‘சர்’ என்ற பட்டத்தை 1929-ல் வழங்கியது.

அதற்கு அடுத்த வருடம் 1930-ல் தான் கிட்டத்தட்ட 9 வருடங்களாக அவர் ஈடுபட்டிருந்த ஒளிச் சிதறல்கள் பற்றிய ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்தது. அதன் பின்பு அவர் உலகம் முழுவதும் அறியப்பட்டார். இந்த ஆய்விற்கான தூண்டுதலை அவருக்கு ஏற்படுத்தியது கடல்தான்.

1921-ல் பிரிட்டனில் நடந்த ஒரு அறிவியல் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு மீண்டும் இந்தியா திரும்பிய போது, கடல் நீரின் நீல நிறம் அவரை சிந்திக்க வைத்தது. கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது என்ற சித்தாந்தத்தில் உருவானதே ஒளிச் சிதறல் கோட்பாடு. இது இயற்பியலில் ‘ராமன் விளைவுகள்’ என்று இவரது பெயராலே அழைக்கப்படுகிறது.

நோபல் பரிசு பெற்ற பின் 1934-ல் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியில் இயற்பியல் துறை தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின்னும் அவரது ஆய்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. 1948-ல் இந்திய விடுதலைக்குப் பின் பெங்களூரில் அவரது பெயரில் ராமன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற ஆய்வுக் கூடத்தை இந்திய அரசு ஏற்படுத்தி அதன் தலைவராக ராமனையே நியமித்தது. 1970 நவம்பர் 21-ல் அவர் இறக்கும் வரை அதன் தலைவராக ராமனே இருந்தார். ஒரு தமிழர் இந்த அளவு உயர்ந்த நிலை அடைந்ததில் நமக்கு பெருமை தானே! 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H