வடகரையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின்
வளாகத்தில் புதிதாக அரசு ஐ.டி.ஐ. தொடங்கப்பட உள்ளது.
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு வெல்டர்- வயர்மேன் பயிற்சியும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தோருக்கு ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், மோட்டார் வாகனம் பயிற்சி வகுப்புகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன. அரசின் மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட விலையில்லா கல்வி உதவிகள் அளிக்கப்படும். மேலும், பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.500 கொடுக்கப்படும். மாணவர்களுக்கு வயது 14 முதல் 40 வரையிலும் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு வயது உச்சவரம்பும் இல்லை.
பயிற்சி
வகுப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அனுப்ப நவம்பர் 16
கடைசி நாளாகும். விண்ணப்பங்களை, மாவட்ட ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல
அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து பெற்றுக்
கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு வெல்டர்- வயர்மேன் பயிற்சியும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தோருக்கு ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், மோட்டார் வாகனம் பயிற்சி வகுப்புகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன. அரசின் மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட விலையில்லா கல்வி உதவிகள் அளிக்கப்படும். மேலும், பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.500 கொடுக்கப்படும். மாணவர்களுக்கு வயது 14 முதல் 40 வரையிலும் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு வயது உச்சவரம்பும் இல்லை.







