Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்க அமைச்சுப் பணியாளர்கள் எதிர்ப்பு:
அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்க அமைச்சுப் பணியாளர்கள் எதிர்ப்பு:
அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் உடற்கல்வி ஆசிரியர்களை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என அமைச்சுப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், அரசு ஊழியர்கள் புத்துணர்ச்சி பெறவதற்காக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப் பந்து மற்றும்
வாலிபால் ஆகிய விளையாட்டுகளில், 178 ஆண்கள் மற்றும் 69 பெண்கள் என மொத்தம் 247 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 75க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடற்கல்வி ஆசிரியர்கள் அசத்தல்: காவல், தீயணைப்பு, வனத்துறை போன்ற சீருடைப் பணியாளர்கள் பங்கேற்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் போட்டியில் பங்கேற்க வயது
வரம்பு கிடையாது என்றும், சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், கடந்த ஆண்டை விட குறைவான அரசு ஊழியர்களே போட்டியில் பங்கேற்றனர். தடகளம் மற்றும் குழு விளையாட்டுகள் வரை அனைத்துப் பிரிவுகளிலும், உடற்கல்வி ஆசிரியர்களின் பங்களிப்பே அதிகமாக இருந்தது. குறிப்பாக தொடர் ஓட்டத்தில் அவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தடகளம் மற்றும் குழு விளையாட்டுகள் பெரும்பாலானவற்றில் அவர்களே முதலிடம் பெற்றனர்.
அரசு ஊழியர்கள் அதிருப்தி: விளையாட்டில் சிறந்து விளங்கும் சீருடைப் பணியாளர்களுடன் மோதி அமைச்சுப் பணியாளர்களால் வெற்றி பெற முடியாது. இதனால் தான், சீருடைப் பணியாளர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே, விளையாட்டை கற்றுக் கொடுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கடந்த காலங்களில் நடுவர்களாக செயல்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், நிகழாண்டில் வீரர்களாக
களத்தில் விளையாடினர். தொழில் நுட்ப ரீதியாக விளையாடும் உடற்கல்வி ஆசிரியர்களை எதிர்த்து அமைச்சுப் பணியாளர்கள் வெற்றி பெறுவது கடினம். எனவே, சீருடைப் பணியாளர்களைப் போல்,
உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் தனியாக போட்டிகள் நடத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது:
உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்வது தொடர்பாக அரசு ஊழியர்களின் கருத்துக்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








