மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் இந்திய
மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1 கோடி, விருது ஆகியவற்றை
அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.2012-ஆம்
ஆண்டில் அப்துல் கலாம் அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில்
மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். பசுமை எரிசக்தியின் அவசியம், தொடர்ந்த,
நீடித்த வளர்ச்சியை உலக நாடுகள் தங்களது வளர்ச்சி திட்டங்களில் கொள்கையாக
எப்படி உருவாக்குவது, அமல்படுத்துவது குறித்து விளக்கிய அவர், மாணவர்களோடு
கலந்துரையாடி, கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இந்த நிலையில், அப்துல்
கலாமின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் கல்வி உதவித் தொகையும்
விருதும் வழங்கப்படும் என்று ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
ரோஜர் பிரைன்ட்லி அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை பிரைன்ட்லி, அப்துல்
கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜுக்கு கடிதம் மூலம்
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரூ.12 லட்சம் ஊக்கத் தொகை: இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுப் பணிக்காக, ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு 4 ஆண்டு மேல் படிப்புக்கு ரூ. 56 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. அதோடு சேர்த்து ஆண்டுதோறும் ரூ. 12 லட்சம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
விருது: மேலும், 2016-17-ஆம் கல்வியாண்டிலிருந்து அறிவியல், பொறியியல் முனைவர் பட்டப் படிப்பில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...