அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்: பதிவு:2 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்: பதிவு:2

கல்விக்குரலின் வாழ்த்துக்கள்...
என் பெயர். பார்வதி. சேலம் மாவட்டம், சேலம் ஊரகம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கந்தம்பட்டியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.
பள்ளிக்காக......
எனது பள்ளி 90 ஆண்டு பாரம்பரியம் பெற பள்ளி. 2000 ஆயிரம் ஆண்டில் இங்கு வந்தேன். பள்ளிக்கு கட்டிட வசதி இல்லவே இல்லை மூன்று வகுப்பறைகள் மட்டும் உள்ளே மற்றவை அருகிலுள்ள கோவில் மற்றும் திறந்த வெளி(வலி)யில் தான். அப்பொழுது இருந்த த்.ஆ ஊர் கவுண்டராகவும் இருந்ததால் சமூகத்தில் நல்ல நெருக்கம் இருந்தும் கொடை ஏதும் பரார். எல்லா செலவினங்களையும் தன் சொந்த செலவில் செய்து வந்தார். 2004 இல் பள்ளி நடுநிலை ஆனது. அப்போது வந்த த். ஆ இடம் நன்கொடை பெறும் திட்டத்தை முன் மொழிந்தேன். மட்டுமல்லாமல் ஊர் பெரியவர்களுடன் சென்று அனுகியபோது பெருத்த அதிர்ச்சி, 100 ம் 200. மாக சுமார் 3000 மட்டுமே தேறியது... அதுவும் பிச்சைக்காரர்களைக் கண்டது போல் விரட்டல் வேறு. மனதொடிந்து அப்போதைக்கு அத்திட்டத்தைக் கைவிட்டோம். அதன் பிறகு ஒரு பதிப்பகத்தார் என்னிடம் தமிழ் உரை எழுதித் தரும்படி கோரினார்கள், 4 எட்டு வகுப்புகளுக்கு எழுதித் தருகிறேன் ஆனால் நீங்கள்என் பள்ளிக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற நிபந்தனை.
அதில் கிடைத்த படியில் இரண்டு மின் விசிறிகளும் நன்கொடையாக அலமாரி ஒன்றும் எங்கள் பள்ளிக்குக். கிடைத்தது. முதல் துளி வந்து விட்டதே இனி வெள்ளாமை நிச்சயம் என மான் அவமானமின்றி பள்ளிக்காக கையேந்த ஆரம்பித்தேன். அப்படி இரண்டு ஜோடி மேசை, நாற்காலிகள், ஆறு மின்விசிறிகள் இரும்பு அலமாரி, மின் மோட்டார், அக்வாகார்டு, ஆகியன கிடைத்தன தற்போது ஒவ்வொரு வகுப்பறைக்கும் இரண்டு மின்விசிறிகள் , ஒரு தொலைக்காட்சிப்பெட்டி (பொதுமக்கள் வழங்கிய கலைஞர்டி.வி.) ஆகியன உள்ளன. எங்கள் பள்ளிக்கி வந்த புதிய த். ஆ. வேலுரில் உள்ள ஒரு அறக்கட்டளையிடமிருந்து ரூ 5, இலட்சம் மதிப்பில் 400 மானவர்களுக்கும் தனித்தனியாக அளவெடுத்துத் தைக்கப்பட்ட வண்னச் சீருடைகள் இரண்டு பெற்றுத்தந்தார். மேலும், காலணிகள், குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன.
எங்கள் பள்ளிக்கு, சுற்றுச் சுவர், கழிப்பறை கிடையாது. ஏனெனில் ஊரில் எங்கும் பொது இடமே இல்லை.
மாநகராட்சிக்கு எங்கள் பட்டதாரி ஆசிரியர் திரு ஜெயப் பிரகாஷ் அவர்கள் 30 முறைக்கும் மேல் படையெடுத்ததன் விளைவாக இன்று அ.க இ. ஒரு கட்டிடமும் சேலம் மாநகராட்சி மூலம்ஆறு வகுப்பறை கொண்ட ஒரு கட்டிடம் மற்றும ்இரண்டு வகுப்பறை கொண்ட இரண்டு கட்டிடங்களும் உண்டு
கழிப்பறை கட்ட இடமே இல்லாத காரணத்தால் ஒரு வகுப்பறையையே நவீன வசதிகள் கொண்ட கழிப்பறையாக மாறியுள்ளது. பள்ளியில் இளஞ் செஞ்சிலுவைச் சங்கம், அறிவியல் மன்றம், சுற்றுச் சூழல் மன்றம் ஆகியவை உண்டு..
ஒவ்வொரு நாளும் மதிய உணவு கண்காணிப்பு இரு ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் . நாங்கள் சுவைபார்த்துச் சொல்லிய பிறகே மானவர்களுக்குப் பரிமாறப்படும். எம் பள்ளி சத்துணவு நன்றாக இருக்கும்.
நன்கொடை மூலம் பெறப்பட்ட இரண்டு மேசைக்கணினி மற்றும் அரசு வழங்கிய எட்டு மடிக்கணினிகளுடன். எனது கணினி கற்பித்தல் 2006 இலிருந்து தொடங்கியது. வாரவாரிப் பாடத்திட்டத்துடன் கால அட்டவணையுடன் எம்.எஸ். ஆபீஸ எனது 6,7,8 மானவர்களுக்குக் கற்பித்தல் பணியில் ஈடுபட்டேன்.
ரோட்டரி சங்கத்தாரின் உதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 30,000 வசூல் செய்து தந்தேன். அவ்வூரிலேயே முதன் முதலாக பள்ளி ஆண்டு விழாவையும் அவ்வாறே மிகச்சிறப்பாக முடித்தோம். ஆண்டுவிழாவில் நான் இசையமைத்துத் தயாரித்த அரசுப் பள்ளிகளின் சிறப்பினை பறைசாற்றும் வகையில் அமைந்த வில்லுப்பாட்டு சிறப்படைந்தது. இதனால் அவ்வருடம் மாணவர் எண்னிக்கையும் கூடியது.
வகுப்பிற்காக....
மாணவர்களின் புத்தக ஒப்பித்தலுடன் எனது வகுப்பு முடிவதில் எனக்கு என்றுமே விருப்பம் இருந்ததில்லை... ஏதேனும் புதியவற்றைக் அறியச் செய்யவேண்டுமென மிகு விருப்பம் கொள்வேன். இதற்காக இணையத்தில் தேடி ஆடல் பாடலுடன், செயல்பாடுகளுடன் கற்பிப்பேன். சமச்சீர்கல்விக்கு முந்தைய செய்யுள் பாடங்கள், அனைத்து வக்குப்புக்கும் மெட்டமைத்து பாடல் வழியாகக் கற்பித்தேன். இவை ஒன்றிய அளவில் பிற ஆசிரியர்களாலும் கையாளப்பட்டன. மாவட்ட அளவில் சிகரம் தொட்ட ஆசிரியர் என்ற அங்கீகாரம்

எனது வகுப்பறை முழுவதும் எனதும் மானவர்களதுமான படைப்புகள் போட்டி போடும். ஐந்தாம் வகுப்பு எடுக்கும் போது ஒவ்வொரு மானவர்களையும் அவர்களையே ஓவியமாக வரையச் செய்தேன். அதனை வெட்டி அதன் கீழ் முணையில்வண்ண ரிப்பன்களை இணைத்து வகுப்பறையில் தொங்கவிடுவோம். இதனிடையில் ஸ்மைலி பேட்ச் ரெடியாக இருக்கும். அது நிதியமைச்சர், சுகாதார அமைச்சர், சுறுச்சூழல் அமைச்ச நீர்வளத்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர். உள்துறை அமைச்சர், பிரதம அமைச்சர் ஆகியோரை வாக்கெடுப்பு
மூலம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்குவோம். கடமையாற்றத்தவறிய அமைச்சர்களின் இலாக்காக்கள் அவ்வப்போது பறிபோகும்.
வாசிப்புக்கு பார்லேஜி கிடைக்கும்
தன் சுத்தம், படிப்பு, திறனடைவு போன்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு பளபளவென மின்னும் வண்ண ஸ்டார் கிடைக்கும். இதை தனக்கான வண்ண ரிப்பனில் அவர்கள் ஒட்டிவிட வேண்டும் இரில் ஐந்து ஸ்டார் சேர்ந்ததும் ஒரு சிறிய பரிசு. பத்து, பதினைந்து, இருபது என ஒவ்வொரு நிலையிலும், சாக்லேட், பென்சில், பேனா, புத்தகம், என பரிசு வேறுபடும். இதனால் படிப்பில் மட்டுமின்றி வரிசைமுறை, வகுப்பில் கூச்சலிடாமல் தன்முறைக்காக கையை உயர்த்துதல், நேரம் தவறாமை, திருடாமை பொய்சொல்லாமை, உரிய இடத்தில் பொருட்களை வைத்தல், காலணி அனிதல் ஆகிய விழுமியங்களும், பண்புகளும் ஒருங்கே வளர்ந்தன. நான் வகுப்பில் இல்லாத போதும், மானவர்கள் கழிப்பறை செல்லுதல் விளையாடச் செல்லுதலின் போதும் இது தொடரும்.
மேலும் மானவர்களை தினமும் நலம் விசாரிப்பேன். சாப்பிடாமல் ஐந்து மானவர்களாவது வருவார்கள் அவர்களுக்கு இட்டலி வழங்கிய பின்னரே மனம் நிறைவுறும்.
என்னை என் மாணவர்கள் அம்மா என்றே அழைப்பார்கள். சிலருக்கு மட்டும் தமிழம்மா. அவர்களின் பஞ்சாயத்து தலைவியும் (தலைவலியும்) நான் தான். (தீர்ப்பு சொல்லுவோமில்ல.)
வாசித்தல் எனக்குக் கொள்ளைப் பிரியம் வாசிப்பின்போது உலகையே மறந்துவிசுவேன்
நிறைய சிறுவர்மலர்கள் , படக்கதைகள் நாளிதழ்கள், புத்தகங்கள் என் வகுப்பில் வாசிக்க இருக்கும். மேலும் அதில் எழுத்து சொற்களைக் கண்டறிதல், கட்டுரை போன்ற செயல்பாடுகளுக்கு உதவும். மேலும் எனது வகுப்பறை நூலகத்திற்கு என ரூ.4000 மதிப்பில் சொந்த செலவில் புத்தகம் வாங்கி நூலகம் தொடங்கினேன். உணவு இடைவேளையில் வாசிப்புதான்... யோகாவும் நாள்தோறும் உண்டு. ஒருமுறை உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பற்றி எழுதி வாருங்கள் எனத் த. ஆ. ஒரு செயல் திட்டம் கொடுத்தபோது அவர்கள் அணைவரும் தமிழம்மாவைப் பற்றி எழுதினார்கள். எனக்கு விபத்தினால் உடல் நலமின்றி இருந்த போது அம்மனுக்கு பொங்கல் வைக்க வேண்டினார்கள்.. சென்னையினும் பெருவெள்ளம் மனதிலும், வேறும் விருதுகள் வேண்டுமோவென....
2011 இல் எனக்கு விக்கிப்பீடியா அறிமுகமானது. தமிழுக்குச் செய்யும் தொண்டாக அதில் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், சுமார் 700 தமிழர் வாழ்வியல் குறித்த புகைப்படங்களையும், 12,000 தொகுப்புகளையும் மேற்கொண்டேண். இதன்காரணமாக 2013 இல் நடைபெற்ற ஹாங்காங் மாநாட்டில் உதவித்தொகையுடன் அழைத்துச் சிறப்பிக்கப்பட்டேன். இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துபேரில் தமிழகத்தில் இருவரில் நானும் ஒருத்தி. அங்கு கிடைத்த நட்பின் மூலம் இணைய்ம் இன்றி விக்கிக் கட்டுரைகளை பயன் படுத்திக்கொள்ளும் நோக்கில் விக்கி ரீடர் என்ற கருவி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து எங்கள் பள்ளிக்குக் கிடைத்தது. இந்தியாவிலேயே இரண்டு பள்ளிகள் மட்டுமே இதைப் பெற்றன. ஒன்று உ.பி மற்றொன்று எம் பள்ளி.
தற்போது 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் தட்டச்சு மற்றும் விக்கிப்பீடியா பயிற்சி அளித்து வருகிறேன். 15 மாணவர்கள் பயனர்கணக்கு தொடங்கியுள்ளனர். குறுங்கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்துள்ளனர். பள்ளியில் இணையமில்லை ஆதலால் எனது வீட்டிலும் இணையப்பயிற்சி நடைபெறுகிறது.
எனது ஒன்றாம் வகுப்பு ஆங்கிலவழி மாணவர்களுக்காக சைட்வோர்ட்ஸ் 100 இல் வாரம் 5. தேசிய சின்னங்கள், மாநிலங்கள் தலைநகரங்கள் வீட்டு,காட்டு விலங்குகள்,பூக்கள், பழங்கள் காய்கறிகள், வண்னங்கள், என பாடத்திட்டம் சாராதவை உரையாடல்,மாணவர்களே நிகழ்த்தும் பொம்ம்லாட்டம், கதை சொல்லுதல், நாடகம் யாவும் என் வகுப்பில் உண்டு. நான் கதை சொல்லும் போது ஓரிடத்தில் நிற்காமல் குரல் ஏற்ற இரக்கத்துடன் கதைக்கேற்ற பாத்திரமாக மாணவர்களின் அருகேயே செல்வேன். உயிரோட்டமான வகுப்பறையாக அது அமையும்.
இருபதாண்டு பணிநிறைவு பெற்றும் எனது கற்பித்தல் பணியில் நான் நிறைவுகொள்ளவில்லை.. இன்னும்.... இன்னும் நான் செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ... நான் தமிழகமெங்கும் உள்ள உங்களைப் போன்றோரிடமிருந்து நிறைய கற்றுவருகிறேன். எனது எண்ணங்களை பகிர வாய்ப்பளித்த உமாவிற்கும் எடுத்துக்காட்டாய் நிற்கும் ஆசிரியத் தோழமைகளுக்கும் வழிகாட்டக் காத்து நிற்கும் ஏணையோருக்கும் நன்றிகள்.
அன்புடன்
பார்வதிஸ்ரீதரன்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H