மூன்று லட்சம் பேர் பங்கேற்கஉள்ளனர்.தேர்வுக்கு இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், அரசு தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தேசிய வருவாய் வழி தேர்வுக்கு, எட்டாம் வகுப்பு பாடங்கள் முழுமையும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு, அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இம்முறையும் அதே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.ஆனால், திடீரென தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பில், முதல் இரண்டு பருவ பாடங்களையும், ஏழாம் வகுப்பில் அனைத்து பருவ பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்.இதன் அடிப்படையிலேயே வினாத்தாள் அமையும். இதை, திருத்திய அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.