""அரசே! விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டேன். அவர்கள் இழப்பீடு ஏதும் தரவில்லை. மானியம் கேட்டேன், மறுக்கப்பட்டது. என் குடும்பம் பசியால் தவிக்கிறது. இதை விற்றுக் கிடைக்கும் சொற்பக்காசில் கால் வயிறு கஞ்சி குடிக்கிறோம்,'' என்று அழுதான்.
அதிகாரிகளைக் கடிந்து கொண்ட ராஜா, அவனுக்கு சந்தனமரக்காடு ஒன்றை பரிசாக அளித்தான்.
""சந்தனக்காடு தந்தேனே! முன்னேறி விட்டாயா!'' என்றார்.
""ஓ! முன்பு கால்வயிறு கஞ்சி குடித்த என் குடும்பம் இப்போது அரை வயிறு குடிக்கிறது,'' என்றான்.
அதிர்ச்சியடைந்த ராஜா, ""சந்தனமரம் இருந்தால் லட்சாதிபதியாகி இருக்கலாமே! நீ மரங்களை என்ன செய்தாய்?'' என்றான்.
""ராஜா! மரக்கட்டைகளை விற்பதை விட, அதன் கரியை விற்றால் லாபம் அதிகம் கிடைக்கும். நீங்கள் தந்த மரக்காட்டை அழித்து கரியாக்கினேன். அதை விற்று பிழைத்து வருகிறேன்,'' என்றான்.
பிறகென்ன! ராஜா தலையில் அடித்துக் கொண்டான்.
இப்படித்தான்! முன்னேறுவதற்கு எப்போதாவது தான் வாய்ப்பு கிடைக்கும் அதை விட்டுவிட்டால், காலம் முழுக்க அழுவதைத் தவிர வேறு வழியில்லை








