கே.கே., நகரில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையில், 580 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லுாரி
மற்றும் மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதை, பிப்., 2ல், பிரதமர்
மோடி, திறந்து வைக்கிறார்.
கடும் நிதிச் சுமையில் சிக்கித்
தவிக்கும், இ.எஸ்.ஐ., இயக்குனரகம், 2015ல், மருத்துவக் கல்லுாரிகளில்,
மாணவர் சேர்க்கையை நிறுத்தும் முடிவுக்கு வந்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு
கிளம்பியதால், தன் முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. கோவையில்
திறக்கப்படவுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியை, தமிழக அரசு ஏற்று
நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை
இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியை, தமிழக அரசு ஏற்று நடத்தும். இதற்கு,
முறைப்படி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிடமிருந்து முறையான
ஒப்புதல் பெறப்பட்ட பின், வரும் கல்வி ஆண்டில், எம்.பி.பி.எஸ்.,
படிப்புக்கு, 100 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.







