CPS பணியாளர்கள் குறித்த விவரம் இல்லை!!! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


CPS பணியாளர்கள் குறித்த விவரம் இல்லை!!!

ஓய்வு பெற்ற, இறந்த ஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 
இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் எரியோடையை சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர், பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தில் மனு அளித்தார். அதில் 2003 ஏப்., 1க்கு பின் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்தோரின் விவரம், அவர்களிடம் பிடித்த ஓய்வூதிய தொகை உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.
இதற்கு இயக்குனரக பொதுதகவல் அலுவலரான துணை இயக்குனர் (மின் ஆளுமை) பதில் அளித்துள்ளார். அதில் மனுதாரர் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை. இதனால் பதில் அளிக்க முடியாது என, தெரிவித்துள்ளார். பள்ளி கல்வி இயக்குனர் தான், ஆசிரியர்களுக்கு துறை அலுவலராக உள்ளார். அந்த துறை அலுவலகத்திலேயே பணிபுரிவோரின் விவரம் இல்லை என, கூறியிருப்பது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்திற்கு தகவல் தருவதற்காக, 2003 ஏப்.,1க்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை தயார் நிலையில்  வைத்திருக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, 2015 மார்ச் 12ல் பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால் அதே அலுவலகத்தில் தகவல் இல்லை என, கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தகவல் கேட்டு, மேல்முறையீடு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H