குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் அவசியம்
இது குறித்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:ஆதார் அட்டை எடுத்து வரும் நுகர்வோரிடம் அதைப்பெற்று அந்த எண்ணை குறிப்பேட்டில் குறித்து கொள்ளுமாறு பணியாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை கொண்டுவர ஆதார் அட்டை விவரங்களைசேர்க்க இது உதவும். எனவே ஒரு முறை ஆதார் அட்டையை கொண்டு வர சொல்கிறோம். அதே சமயம் ஆதார் அட்டை கொண்டு வந்தால் தான் பொருள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் குறித்து தகவல் அளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார்.








