8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான
தேர்வுபிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு
தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:தேசிய
வருவாய் வழி, திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு
மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு மாணவர்களைத் தேர்வு
செய்வதற்காக வட்டார அளவில் வருகிற 23-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில் அண்மையில் பெய்த மழை பாதிப்பால் சில
மாவட்டங்களில்பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பருவத்
தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாலும் தேசிய வருவாய் வழி உதவித்
தொகைத் தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்டுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.