2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்
தரமான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 2011 ஆம் ஆண்டு முதல், இந்த அரசு மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பேருந்து கட்டணச் சலுகைகள், மிதிவண்டிகள் போன்றவற்றை 12,475 கோடி ரூபாய் செலவில் மாணவ–மாணவியருக்கு அளித்துள்ளது.முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்து ஐந்து ஆண்டுகளில் 2,84,609 மாணவர்களுக்கு 2,544 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, அவர்கள் நிதிச் சுமையின்றி தொடர்ந்து உயர்கல்வி பயின்று வருகின்றனர். இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 579 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உயர் கல்விக்கென 3,821 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.








