மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.பட்டமளிப்பு விழா உரையில், மத்திய கால்நடை பராமரிப்பு ஆணையர் ஹோன்னப்பகோல் பேசியதாவது: பல காரணங்களால் விவசாயம் பொய்த்து போகும்போது, விவசாயிகளின் பணப் பற்றாக்குறையை போக்கும் இயற்கை வங்கிகளாக, கால்நடை வளர்ப்பு பயனளிக்கிறது. இந்தியாவில், 1970ல், 2.2 கோடி டன்னாக இருந்த பால் உற்பத்தி, தற்போது, 14.6 கோடி டன்னாக உயர்ந்து உள்ளது.காலத்திகேற்ப புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகள் அவசியம். கால்நடை துறையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். இதில் உள்ள சவால்களைச் சந்திக்கவும், உற்பத்தியை பெருக்கவும் நம்மிடம் நிறைய வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
* கறவை மாடு, கோழி வளர்ப்பு, உணவு உற்பத்தி தொழில்கள் பெருகி வருவதால், ஆண்டுக்கு, திறன் மிக்க, 1,000 பணியாளர்கள் உருவாக்கப்படுவர்.
* பள்ளியில் இடை நின்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, சுய வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
32 பதக்கங்களை குவித்த லாவண்யா!
கல்வி மற்றும் தனித்திறனில் சாதித்த மாணவர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன. சேலம், மேட்டூரைச் சேர்ந்த, பி.வி.எஸ்சி., பட்டம் பெற்ற மாணவி, லாவண்யா, 32 பதக்கங்களை குவித்தார். மேடையில், பதக்கம், அதற்கான சான்றிதழ்களை துாக்க முடியாமல் திணறினார்.
அவரது தாய் ராதா, ஆனந்த கண்ணீருடன், பதக்க ஆவணங்களை துாக்கிச் சென்றார்.''எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் இது. முதுநிலை படிப்பிலும் சாதிப்பேன்; சிறந்த கால்நடை மருத்துவ நிபுணர் ஆவேன்,'' என, லாவண்யா கூறினார்.








