பிரணாப் முகர்ஜி
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தனி விமானம் மூலம் கொச்சி விமானப்படை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை, கேரள கவர்னர் பி.சதாசிவம், முதல்– மந்திரி உம்மன்சாண்டி, முன்னாள் மந்திரி மாணி, கொச்சி மேயர் சவுமினி ஜேம்ஸ் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
கட்டுப்பாடு
அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வது, பொறுமை,கட்டுப்பாடு ஆகியவை இணைந்தது தான் கல்வி. நல்ல குணாதிசயங்களை வளர்த்து, சகிப்பு தன்மையுடன் தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான் உயர் கல்வி. இந்த கோட்பாடுகளை ஆண்டாண்டு காலமாக இந்தியா கடை பிடித்து வருவதுடன் உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.
ஒரே பாரதத்தின் கீழ் இளைஞர்களை ஒருங்கிணைக்க கல்வி உதவியாக இருக்க வேண்டும்.
ஆனால் நமது நாட்டில், சர்வதேச தரத்தில் கல்வி நிலையங்கள் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். அனைத்து வளர்ந்த நாடுகளையும் கல்வி அறிவில் சிறந்த இளைஞர்கள் வழிநடத்தி வருகிறார்கள். உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது இளைய தலைமுறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கேரள கவர்னர் பி.சதாசிவம், முதல்– மந்திரி உம்மன்சாண்டி, மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், ஜோஸ் கே. மாணி எம்.பி. ஆகியோர் பேசினர்.
சாமி தரிசனம்
தொடர்ந்து குருவாயூர் புறப்பட்டு சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கிருஷ்ணசாமி கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொச்சி சென்ற பிரணாப் முகர்ஜி, பால்காட்டி பாலசில் நடைபெற்ற இந்திய பினல் கோடின் 155– வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
இன்று( சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மொரிசிஸ் சர்வதேச கூட்ட அரங்கில் நடைபெறும் விழாவில் மொரிசிஸ் முதல் கட்ட திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் 11.40 மணிக்கு கோழிக்கோடு புறப்பட்டு செல்லும் அவர், டிஜிட்டல் கேரளா உட்பட 4 திட்டங்களை கோழிக்கோடு யு.என்.சைபர் பார்க்கில் 12.45 மணிக்கு நடைபெறும் விழாவில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.








