» நில நடுக்கம்.
10052) தமிழ் நாட்டில் விளையும் முக்கிய எண்ணெய் வித்து எது?
» நிலக்கடலை.
10053) இந்தியாவின் முதல் ஆற்றல் மூலமாகத் திகழ்வது எது?
» நிலக்கரி.
10054) படிம எரிபொருள் எது?
» நிலக்கரி.
10055) புதுப்பிக்க முடியாதது எது?
» நிலக்கரி.
10056) எரிபொருளின் கலோரி மதிப்பு வரிசை ---------------.
» நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, பீட், உலர்ந்த மரம்.
10057) கருப்புத் தங்கம், கருப்பு வைரம் என அழைக்கப்படுவது எது?
» நிலக்கரி.
10058) ஆந்திரசைட் மற்றும் லிக்னைட் எந்த எரிபொருளின் வடிவங்கள்?
» நிலக்கரி.
10059) நெய்வேலியில் என்ன வெட்டி எடுக்கப்படுகிறது?
» நிலக்கரி.
10060) ஜிம்பாப்வே நாட்டில் எந்த மாதிரியான வயல்கள் அதிகம் காணப்படுகின்றன?
» நிலக்கரி வயல்கள்.
10061) நில உச்ச வரம்பு திட்டம் எதன் கீழ் வரும்?
» நிலச்சீர்திருத்தம்.
10062) நிலத்தின் மைலுக்கும் கடலின் மைலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
» நிலத்தில் ஒரு மைல் 5280 அடி. கடலில் ஒரு மைல் 6080 அடி.
10063) ஆற்றல் அலைகளின் ஒரு வடிவமாக வெளிப்படுபவை எவை?
» நிலநடுக்கங்கள்.
10064) சீஸ்மோகிராப் கருவி எதை அளவிடப் பயன்படுகிறது?
» நிலநடுக்கம்.
10065) பஞ்சபூதங்கள் எவை?
» நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்.
10066) மலை ஏறும் ஒரு நபர் முன்பக்கமாக சாய்வதற்குக் காரணம்?
» நிலைத் தன்மையை அதிகரிக்க.
10067) சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை யார்?
» நிவேதிதா.
10068) டால்டனிசம் எனப்படுவது எது?
» நிறக்குருடு.
10069) நிறக்குருடு என்பது என்ன நோய்?
» நிறங்களைப் பிரித்தӮய முடியாத கண் நோய்.
10070) எதன்மூலம் வானவில் தோன்றுகிறது?
» நிறப்பிரிகை.
10071) வெள்ளைநிற ஒளி கொண்டு ஒரு சோப்புப் படலத்தைப் பார்க்கும் போது பல வண்ணங்கள் தோன்றக் காரணமாக நிகழ்வது?
» நிறப்பிரிகை.
10072) VIBGYOR என்பது என்ன?
» நிறமாலை (வானவில்லின் 7 நிறங்கள்).
10073) மழை நீரானது எந்த நிறம்?
» நிறமில்லை.
10074) சுத்தமான தங்கம் என்ன நிறத்தில் இருக்கும்?
» நிறம் கிடையாது.
10075) இயற்பியல் அளவீட்டிற்கு எடுத்துக்காட்டு எது?
» நிறை.
10076) பொருளின் நிலைமப் பண்பு?
» நிறையைப் பொறுத்தது.
10077) லைலா - மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?
» நிஜாமி.
10078) பாலூட்டிகளில் மிகப்பெரிய விலங்கு எது?
» நீலத்திமிங்கலம்.
10079) எந்த விளையாட்டுத் துறையுடன் குற்றாலீஸ்வரன் தொடர்புடையவர்?
» நீச்சல்.
10080) மனிதவள குறியீட்டின் ஆக்கக்கூறுகள் யாவை?
» நீண்ட ஆரோக்கியமான வாழ்வு, அறிவு மற்றும் வாழ்க்கைத் தரம்.
10081) மாரிக்கால உறக்கம் (Hibernation) என்றால் என்ன?
» நீண்ட குளிர்கால உறக்கம்.
10082) தென்னிந்திய நல உரிமைக்கழகம் என எந்தக் கட்சி அழைக்கப்பட்டது?
» நீதிக்கட்சி.
10083) 1921-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி எது?
» நீதிக்கட்சி.
10084) அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என கருதப்படுகிறது ---------------.
» நீதித்துறை.
10085) இந்திய அரசில் காணப்படும் 3 உறுப்புகள்?
» நீதித்துறை, சட்டமியற்றும் துறை, நிர்வாகத்துறை.
10086) 2012 செப்டம்பர் 13 அன்று நியமிக்கப்பட்ட 39ஆவது இந்தியத் தலைமை நீதிபதி ---------------.
» நீதிபதி அல்டமாஸ் கபிர்.
10087) மனித உரிமைக் கழகத்தில் தமிழ்நாடு தலைவர் யார்?
» நீதிபதி நாயினார் சுந்தரம்.
10088) சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதிகள் யார்?
» நீதிபதி முத்துசாமி அய்யர், நீதிபதி கிருஷ்ணசாமி அய்யர்.
10089) திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டம் தொடர்பாக வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு எந்த நீதிபதிகளால் வழங்கப்பட்டது?
» நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா மற்றும் முகுந்த்ராம் சர்மா.
10090) இந்தியாவின் நாற்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
» நீதியரசர் சதாசிவம்.
10091) அசோக சக்ரா வீரவிருது பெற்ற முதல் இந்தியப் பெண் யார்?
» நீரஜா மிஸ்ரா.
10092) காப்பு செல்கள் இலைத்துளைக்கு செய்யும் உதவி என்ன?
» நீராவிப்போக்கு.
10093) சாக்கரின் யாரால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது?
» நீரிழிவு நோயாளிகள்.
10094) ரோம் நகரம் தீப்பிடித்து எரியும்போது பிடில் வாசித்தாகக் கூறப்படும் மன்னர் யார்?
» நீரோ மன்னர்.
மீனாட்சி இராமசாமி உடற்கல்வியியல் கல்லுாரி ,(BPEd) தத்தனுார், அரியலுார் மாவட்டம்.
10095) பெருங்கடலில் நகர்கின்ற நீர் எப்படி அழைக்கப்படும்?
» நீரோட்டம்.
10096) கொள்ளளவில் பெருக்கமடைவது எது?
» நீர்.
10097) உறையும் போது கன அளவு அதிகரிக்கும் பொருள் எது?
» நீர்.
10098) பூமியில் உயிர்தோன்றிய முதல் இடம் எது?
» நீர்.
10099) ஆக்ஸிஜன் ஹைட்ரைடு என்பது எது?
» நீர்.
10100) ஒரு சிறந்த குளிர்விப்பானாகப் பயன்படும் நீர்மம் எது?
» நீர்.
10101) பங்களாதேஷின் தேசிய சின்னம் எது?
» நீர் அல்லி.
10102) தனிமமோ அல்லது கூட்டுப் பொருளாக இல்லாதது எது?
» நீர்.
10103) சத்தில்லாத உணவுப்பொருள் எது?
» நீர்.
10104) வாகன ரேடியேட்டரில் குளிர்விப்பானாகப் பயன்படுவது?
» நீர்.
10105) தாவரங்களிலிருந்து திரவத் துளிகளாக நீர்வெளியேறும் முறை ---------------.
» நீர்க்கசிவு.
10106) பூமியில் நீர்விரவிக் காணப்படும் பகுதி எது?
» நீர்க்கோளம்.
10107) நிலத்தடி நீர் மண்டலத்தின் மேல் எல்லை எது?
» நீர்மட்டம்.
10108) பாபநாசத்தில் எந்த வகை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது?
» நீர்மின்சக்தி.
10109) மலிவான போக்குவரத்து மார்க்கம் எது?
» நீர்வழி மார்க்கம்.
10110) ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸின் இறுகும் தன்மைக்குக் காரணம்?
» நீர்வெளியேற்றம்.
10111) எந்த ஆக்டோபஸ் மிகக் கொடூரமானது?
» நீல வளைய ஆக்டோபஸ்.
10112) 2007ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றவர் ---------------.
» நீல. பத்மநாபன்.
10113) பாரத மாதா சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் ---------------.
» நீலகண்ட பிரம்மச்சாரி.
10114) முதுமலை வனவிலங்கு சரணாலயம் உள்ள இடம் ---------------.
» நீலகிரி.
10115) பைகாரா மற்றும் குந்தா நீர் மின் நிலையங்கள் உள்ள மாவட்டம் ---------------.
» நீலகிரி.
10116) தமிழ் நாட்டில் புகைப்படச்சுருள் தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் ---------------.
» நீலகிரி.
10117) மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்குமிடம் எது?
» நீலகிரி.
10118) தேயிலை மற்றும் காப்பி பயிரிடப்படும் மாவட்டம் எது?
» நீலகிரி.
10119) காடுகள் அடர்த்தி அதிகமாக உள்ள மாவட்டம் எது?
» நீலகிரி.
10120) தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் எங்குள்ளன?
» நீலகிரி மலைப்பகுதியில்.
10121) தமிழகத்தின் மாநில விலங்கு எது?
» நீலகிரி வரையாடு.
10122) கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளடக்கிய வனவிலங்கு பாதுகாப்பகம் எது?
» நீலகிரி வனவிலங்கு பாதுகாப்பகம்.
10123) துப்பாக்கி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?
» நீலகிரி.
10124) நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?
» நீலகிரி.
10125) இந்தியாவின் நீலமலைகள் என்றழைக்கப்படுவது எது?
» நீலகிரிக் குன்றுகள்.








