TODAY CENTRAL BUDGET INCOME TAX HIKE INCREASED TO 300000??? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TODAY CENTRAL BUDGET INCOME TAX HIKE INCREASED TO 300000???

வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா? பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது விவசாயம், தொழில் துறைக்கு கூடுதல் சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு?
மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் விவசாயம், தொழில் துறைக்கு சலுகைகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23–ந் தேதி தொடங்கியது.
பட்ஜெட் இன்று தாக்கல்
25–ந் தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 2016–17–ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு–செலவு திட்டம்) மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
நிதி மந்திரி அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3–வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது புதிய வரிகள், வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.

பொருளாதார வளர்ச்சி
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், வரும் நிதி ஆண்டில் 7 முதல் 7.75 சதவீத வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அருண் ஜெட்லி கூறி இருந்தார். எனவே உற்பத்தி துறைக்கு ஊக்கம் அளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் பல நாடுகளின் பொருளாதாரம் நலிந்தும், சரிந்தும் காணப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த பட்ஜெட் அரசுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதலாக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி தேவைப்படும் நிலையில், இந்த சவாலை சமாளிப்பதற்கு, வங்கிகளுக்கு தேவையான கூடுதல் மூலதனத்தை திரட்ட எத்தகைய வழிவகை காணப்படும் என்பது பற்றியும் அருண்ஜெட்லியின் இந்த பட்ஜெட்டில் தெரிய வரும்.
வருமான வரி
தற்போது தனிநபருக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக உள்ளது. விலைவாசி உயர்ந்து செலவுகள் அதிகரித்து இருப்பதால் இந்த வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாதச்சம்பளம் பெறுவோர் மத்தியில் உள்ளது. எனவே இதுபற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
வேளாண்மை துறைக்கு சில சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. விவசாய வருமானத்துக்கு வரி விதிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அதுபற்றிய அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
புதிய வரிகள்
செலவினங்கள் அதிகரித்து வருவதை சமாளிக்க மறைமுக வரிவிதிப்பு அல்லது புதிய வரிகளை அறிமுகம் செய்வதன் வாயிலாக கூடுதல் வருவாயை பெருக்க திட்டமிட்டு இருப்பது பற்றிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சேவை வரி 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதேபோல் இந்த ஆண்டும் சேவை வரி உயர்த்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு ‘தூய்மை இந்தியா‘ திட்டத்துக்கு வரி அறிவிக்கப்பட்டதை போன்றே தொடங்கிடு இந்தியா அல்லது டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கும் நிதியை பெருக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இறக்குமதி தங்கம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை சரிந்து இருப்பதால் இவற்றின் மீது சுங்க வரியை மறு அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோல் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து வருவதால், அதற்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சமீப காலமாக கிராமப்புறங்களில் கடும் வறட்சி நிலவுவதால், சமூக நலத்திட்டங்களுக்கு கட்டாயம் கணிசமான நிதி ஒதுக்கவேண்டிய நெருக்கடி நிதிமந்திரி அருண்ஜெட்லிக்கு உள்ளது. குறிப்பாக ஊரக வேலை உறுதி திட்டம், பயிர்க்காப்பீட்டு திட்ட விரிவாக்கம், சாகுபடியை ஊக்குவிப்பது, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
அடுத்த நிதி ஆண்டுக்குள், நிதி பற்றாக்குறையை 3.5 சதவீதமாக குறைக்கவேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான வழி முறைகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
அன்னிய முதலீடுகள்
பொருளாதார சீர்திருத்தங்கள் இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பது சாத்தியம் இல்லை என்பதால், அன்னிய முதலீடுகளை பல்வேறு துறைகளில் துரிதமாக ஈர்ப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
தோல் தொழில் மற்றும் நகைத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் இத்துறைகளுக்கு வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம்.
தொழில் நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதியை நிதி மந்திரி இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H