கீ ஆன்சர்' தயாரிப்பில் மதுரை ஆசிரியர்கள் குழு.
தற்போது பிளஸ் 2 தேர்வுகளுக்கான 'கீ ஆன்சர்' தயாரிக்க, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு, மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் மூன்று அல்லது நான்கு மாவட்டங்களில் பாடவாரியாக ஆசிரியர்களை தேர்வு செய்து 'கீ ஆன்சர்' தயாரிக்கப்படும். நான்கு வகையான 'கீ ஆன்சர்'களை ஒப்பிட்டு இறுதி 'கீ ஆன்சர்' முடிவு செய்து, அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்தப்படும். இந்தாண்டு அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்க மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்," என்றார்.








