தொழிற்பாடப் பிரிவுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் பிரதான
பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 கணக்குத் தேர்வு வெள்ளிக்கிழமை
நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4 ஆம் தேதி
தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், ஆங்கிலம் தேர்வுகள்
நிறைவடைந்துள்ளன.
இதைத் தொடர்ந்து
கடந்த 14-ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெற்றது.இத்தேர்வு மருத்துவம்,
பொறியியல், விவசாயம் போன்ற தொழிற் படிப்புகளை தேர்வு செய்ய கட்-ஆப்
மதிப்பெண்களைநிர்ணயிப்பதாகும். ஆனால், சிறிதும் எதிர்பார்க்காத வகையில்
வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.இதைத்
தொடர்ந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 18) பிளஸ் 2 கணித பாடத் தேர்வு
நடைபெறுகிறது. வேதியியல் தேர்வு போன்று இல்லாமல் இத்தேர்வு, எளிமையாக
இருக்க வேண்டும்என்பதே மாணவ, மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.







