ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் காசியம்மாள். இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு-ஆய்வாளராக உள்ளார். இவரது கணவர் ராஜாமணி. இவர்களது மகள் உமா மகேஸ்வரி (17). அதேபகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்நிலையில், திங்கள்கிழமை ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் உமா மகேஸ்வரி கணினிஅறிவியல் தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, உமா மகேஸ்வரிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிபட்டி தெருவைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ராஜ்குமார் (21) என்பவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பாக கடந்த நவம்பரில் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆத்திரமுற்ற ராஜ்குமார், உமா மகேஸ்வரியை வெட்டியிருக்கலாம் என போலீஸார் கூறினர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.








