தினத்தந்தி’- கற்பக விநாயக கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் ‘வெற்றி நிச்சயம்’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி செங்கல்பட்டு அருகே ஏப்ரல் 3-ந் தேதி நடக்கிறது: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தினத்தந்தி’- கற்பக விநாயக கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் ‘வெற்றி நிச்சயம்’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி செங்கல்பட்டு அருகே ஏப்ரல் 3-ந் தேதி நடக்கிறது:

தினத்தந்தி’யும், கற்பக விநாயக கல்விக்குழுமமும் இணைந்து நடத்தும் ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி, செங்கல்பட்டை அடுத்த படாளம், சின்ன கொளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாக அரங்கில் ஏப்ரல் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி? என்பதை அவர்களே அறிந்துகொள்வதற்கு வசதியாக ‘வெற்றி நிச்சயம்’ என்ற சிறப்புமிக்க வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, ‘தினத்தந்தி’ நாளிதழ் நிறுவனம் ஏற்கனவே 14 ஆண்டுகள் நடத்தி முடித்து விட்டது. இந்த ஆண்டு 15-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, செங்கல்பட்டை அடுத்த படாளம், சின்ன கொளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாக அரங்கில்(குளிரூட்டப்பட்ட) நடத்தப்படுகிறது. தினத்தந்தி நிறுவனம், கற்பக விநாயக கல்விக்குழுமத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
இலவசமாக பங்கேற்கலாம்
வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி கற்பக விநாயக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாக அரங்கில் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் காலை 7 மணியில் இருந்தே தங்கள் பெயர்களை நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம். மாணவர்களுடன் பெற்றோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களை அறிந்து கொள்ள கல்லூரி, கல்லூரியாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வெற்றிநிச்சயம் புத்தகத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டு உள்ளது. இது மாணவ-மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அண்ணா பல்கலைக்கழக ‘டீன்’

இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியை 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக ‘டீன்’ முனைவர் எஸ்.சிவநேசன் தலைமையேற்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பல்வேறு துறையை சேர்ந்த பேராசிரியர்களும், வல்லுனர்களும் எடுத்துரைப்பார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் இலவச மாக கலந்து கொள்ளலாம். தாங்கள் எந்த மேற்படிப்பு படிக்க வேண்டும், எப்படி வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற முழு தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கல்வியாளர்களின் விளக்க உரை அமையும்.

பஸ்கள் ஏற்பாடு

நிகழ்ச்சி நடைபெறும் கற்பக விநாயக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்துக்கு செல்ல இலவசமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூர், காஞ்சீபுரம் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான பஸ்கள் காலை 7.30 மணியில் இருந்து விடப்படுகின்றன. அதாவது மேடவாக்கம், மகாபலிபுரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், படப்பை, கூடுவாஞ்சேரி, அச்சரப்பாக்கம், திண்டிவனம், வந்தவாசி, செய்யூர், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், பூந்தமல்லி, திருப்போரூர் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

மாலையில் நிகழ்ச்சி முடிந்ததும் கல்லூரியில் இருந்து அந்தந்த பகுதிகளுக்கு அழைத்துச்செல்ல பஸ்கள் இலவசமாக இயக்கப்பட உள்ளன.

மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு, காலை, மாலை தேநீர், குளிர்பானம், பிஸ்கட் இலவசமாக வழங்கப்படும். மேலும் நிகழ்ச்சியில் தேவையானவற்றை குறிப்பு எடுப்பதற்கு வசதியாக பேனா, குறிப்பேடு அடங்கிய போல்டர் வழங்கப்படும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H