Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆசரியர்-மாணவர் கலந்துரையாடல் அவசியம்:
பாடம் நடத்துவதோடு, கலந்துரையாடல், குழு விவாதம் போன்றவற்றையும் ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கி.கருணாகரன் வலியுறுத்தினார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் "தமிழல்லாதோருக்குத் தமிழ்மொழிக் கற்பித்தல் புதிய அணுகுமுறைகள்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கி.கருணாகரன் பேசியதாவது:
பொதுவாக, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வெறும் மதிப்பெண்கள், பட்டம் போன்றவற்றைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல் சமுதாயச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் அமைய வேண்டும். அப்போதுதான் மொழியின் பயன்பாடு மக்களை நேரடியாகச் சென்றடையும்.
மொழியைச் சரியாக உச்சரிக்கச் செய்தல், நன்றாக இடைவெளிவிட்டு தெளிவாகப் படித்தல், கருத்துகளை நிறைவாகப் புரிந்து கொள்ளச் செய்தல் ஆகிய மூன்று நிலைகளைக் கடைப்பிடித்தால் தமிழல்லாதோரும் தமிழைக் கற்பிக்க முடியும்.
சர்வதேச அளவில்...: ஆசிரியர்கள் தங்களது ஒவ்வொரு பாடவேளையையும் முழுவதுமாகப் பாடம் நடத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட பாடம் தொடர்பாக, ஆசிரியர்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் அது தொடர்பாக மாணவர்களின் புரிதலை அறிய முடியாது. இதற்காக மாணவர்-ஆசிரியர் கலந்துரையாடல், மாணவர் குழு விவாதம் போன்றவற்றை 15 நிமிஷங்கள் மூலம் 20 நிமிஷங்கள் வரை நடத்த வேண்டும். இந்த நடைமுறை தமிழ், ஆங்கில வகுப்புகளுக்கும் பொருந்தும்.
சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் இந்த முறை மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும்.
தமிழ் குறித்து உலகம் முழுவதும் வெளியிடப்படும் ஆய்விதழ்களில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வரும் "தமிழியல் என்ற ஆய்விதழ் முதல் இடத்தை பெற்றுள்ளது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இந்த ஆய்விதழில் தமிழ் மொழியின் பன்முகப் பண்புகளையும், ஆற்றலையும் விளக்கும் சிறந்த கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








