கோடை கொளுத்தத் தொடங்கி விட்டது. வெயில்
காலத்துக்கென உணவு முறைகளில் மாற்றம் செய்தால் உடலை குளிர்ச்சியாக வைக்க
முடியுமா... பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஸ்டெல்லா.
கோடை காலத்தில் நீரிழப்பு ஏற்படாமல்
பார்த்துக்கொள்வது மிக முக்கியம். அதிக அளவு திரவங்களை அருந்துங்கள்.
பழரசங்கள், காய்கறி ஜூஸ் ஆகியவை வெயிலை விரட்ட உதவுவதோடு, உடலுக்கு
ஊட்டமும் அளிக்கும். சாதா டீ, காபிக்கு பதிலாக மூலிகை டீ அல்லது சூப்
அருந்துவது நல்லது.
கொத்தமல்லி, இஞ்சி, மிளகு ஆகியவற்றை
உணவில் சேர்ப்பது குளிர்ச்சியைக் கூட்டும். சுக்கு, லவங்கம் ஆகியவை
வெதுவெதுப்பைத் தரும். சமைக்காத மற்றும் ஆவியில் வெந்த உணவே கோடைக்கு
உகந்தது. டீப் ஃப்ரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கீரை வகைகள், இலைக்காய்கறிகள், முள்ளங்கி,
வெள்ளரி, தக்காளி ஆகியவை கோடை உணவில் இடம் பிடிக்கட்டும். இரு உணவுகளுக்கு
இடையே பழங்கள் அல்லது காய்கறி சாலட் சாப்பிடலாம். பாகற்காய்க்கு
குளிர்ச்சி மற்றும் சுத்திகரிப்புத் தன்மை உண்டு. கோதுமை, பார்லி, கம்பு
போன்ற தானியங்கள் சத்தும் குளிர்ச்சியும் தரும். வெங்காயம்,
உருளைக்கிழங்கு, கேரட், கீரை, பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்தி சூப்
தயாரித்து அருந்துவது தாதுச்சத்தையும் குளிர்ச்சியையும் தரும்.இது போன்ற செய்திகளை மக்கள் நலன் கருதி வெளியிடுவது கல்விக்குரல் வலைதளம் மட்டுமே மற்ற
வலைதளங்கள் இதனை காப்பி செய்து தன்னுடை வலைதலத்தில் பதிவிடுகிறார்கள்,இது
போன்ற செய்திகளை திரட்டுவதற்கு கல்விக்குரல் மிகவும் சிரத்தை எடுப்பது
உண்மை..
ராஜ்மா, லிமா பீன்ஸ், பாசிப்பருப்பு
ஆகியவையும் குளிர்ச்சி தரும். இறைச்சி அதிக சூடு என்பதால் கோடையில்
மீனுக்கும் காய்கறிகளுக்கும் மாறலாம்.







