SUMMER TIPS: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


SUMMER TIPS:

உஸ்ஸ்ஸபா...:கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?
கோவையில் வெயில் அளவு, கடந்த மார்ச், 21ம் தேதி, 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியிருந்தது. இதே போன்ற வெப்பநிலை, இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று, வானிலை மற்றும் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவிக்கின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, கோடை வெயில், தமிழகத்தை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. சாலையில் அனல் காற்று தகிக்கிறது. வாகனத்தில் செல்வோர், ஆடை நனையுமளவுக்கு வியர்வையில் குளிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள், பெரியவர்கள் வெயிலால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொடர் காய்ச்சல், அம்மை, வெக்கை, உடலில் கொப்புளங்கள் என, பச்சிளம் குழந்தைகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. மருத்துவமனைகள், கிளினிக்குகள் நிரம்பி வழிகின்றன. இரவில் வீட்டுக்குள் படுத்தால் உஷ்ணம். கதவைத் திறந்து வைத்தாலோ, வீட்டுக்கு வெளியே படுத்துறங்கினாலோ திருட்டு பயம். இன்னும் இரண்டு மாதங்கள் வரை, இந்த வெயிலை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என, புலம்பாதவர்கள் இல்லை.
இது போதாக்குறைக்கு, 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெயில் கொடுமையால் காமாலை, அம்மை, சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்றும் தகவல்கள் பரப்பப்படுகின்றன; பகிரப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் ஒருவித பீதியில் உள்ளனர். வெயில் கொடுமையை சமாளிப்பது எப்படி? பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என, இந்த சிறப்பு பக்கம், 'உங்களுக்கு வழிகாட்டும்.
டாக்டர் குமாரசாமி கூறுகிறார்...
*ஆறடி உடலுக்கு, தலையே பிரதானம். வெயிலின் முதல்பாதிப்பு தலைக்கே. வெயிலால் 'மண்டை காய்ந்து' சூடேறாமல் தவிர்க்க, 'ஹெல்மெட்' அணியுங்கள். விழிகளை
பாதுகாக்க, 'கூலிங் கிளாஸ்' அணியலாம். 'ெஹல்மெட் அணிந்தவர் தலையில் வெளியேறும் வியர்வையில் இருந்து ஒருவித 'பூஞ்சை' தலை முடியின் வேர்க்கால்களில் சேரும். பொடுகு, செதில் ஏற்படும். இதனால், முடி உதிர்ந்து, தலையில் 'சொரியாசிஸ்' ஏற்படும். இதைத் தவிர்க்க நல்ல தரமான ஷாம்பு, கடலை மாவு, பயத்தம்பருப்பு பொடி ஆகியவற்றில் காலை, இரவு, இரு வேளையும் குளிப்பது அவசியம்.
*உஷ்ணம் அதிகமாக இருப்பதால் கீழ் உதடும், மேல் உதடும் இணைந்து இருக்காது. அப்படியே இருந்தாலும் போதிய ஈரப்பதம் இல்லாமல் இருக்கும். 'ரோஸ் வாட்டர்' மற்றும் வாஸ்லின், லிப்பாம், வெண்ணை தடவலாம்.
*பனங்கற்கண்டு, சீரகம் நீர், நுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி, நன்னாரி, சர்பத் பானங்களை அருந்தலாம். உடல் உஷ்ணத்தால் தொப்புளில் இருந்து துர்வாடை வீசும். குளிக்கும்போது துாய்மைப்படுத்த வேண்டும். முகத்துக்குப்போடும் பவுடரை, தொப்புள் மீது அடிக்கக்கூடாது. சிறுநீர் கழித்ததும், உறுப்பை துாய்மைப்படுத்த வேண்டும். தொடை இடுக்கு பகுதிகளை துாய்மையாக வைத்துக்கொள்ளாவிடில், வெயிலால் தோல் உரிந்து கொப்புளம், அரிப்பு, எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க தரமான லோஷன், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். கெண்டைக்கால், முழங்கால்களை தேய்த்துக்கழுவ வேண்டும். கால்களில் தேங்காய் எண்ணெய்யை, இரவில் படுக்கைக்கு செல்லும் முன் தேய்த்துக்கொள்ளலாம். வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் கோடையில் உங்களை பாதுகாக்கும்.
*காது மடல்கள் எப்போதும் வெப்பத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சிறிது நன்நீரை காதுகளின் துவாரத்தினுள் சென்று வர அனுமதிக்க வேண்டும். அப்போது வெப்பத்தின் பாதிப்பிலிருந்து காதுகள் தப்பும்.

சருமம் பத்திரம்...:
அழகுக்கலை நிபுணர் காயத்ரி கூறியதாவது: வெயிலில் பயணிக்கும் போது முகம் கருத்து பொலிவிழந்து விடாமல் இருக்க, தரமான 'சன்ஸ்கிரீன் லோஷன்'களை பயன்படுத்தலாம். இவை மூன்று மணி நேரம் மட்டுமே தாங்கும். அதன் பின், முகத்தை இதமான தண்ணீரில் கழுவி, புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.
*வெயிலில் சென்றுவந்த பின் கண் எரிச்சல் ஏற்பட்டால் வெள்ளரி, உருளைக்கிழக்கு இவற்றில் ஒன்றை, அரைத்து கண் இமை மீது போட்டுக்கொண்டால் குளிர்ச்சி தரும்.
*வேர்க்குரு, பொடுகுத் தொல்லை வராமல் இருக்க, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும். ஆண்கள் வெயில் காலம் நிறைவடையும் வரை அன்றாடம் தலைக்கு குளிக்கலாம்.
*தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாக இருக்க, ஊற வைத்த வெந்தயத்தை மசித்து, ஒரு கப் தயிர் கலந்து தலை முடியின் கீழ் உள்ள வேர்க்கால்கள் நனையும் வகையில் போட்டுக்கொண்டால் தலைப்பகுதி குளிர்ச்சியாக இருக்கும்.
*சருமம் அழகாக இருக்க தர்பூசணி, வெள்ளரியை அரைத்து ஈரத்துணியில் நனைத்து, முகத்தில் போட்டுக்கொண்டால், முகத்திலிருந்து வியர்வையை வெளியேற்றும் சருமத்துவாரங்கள் சுத்தமாகும். முல்தானி மெட்டி, புளித்த தயிர் சேர்த்த கலவை, கடல்பாசி, பால், எலுமிச்சைச்சாறு சேர்த்த கலவையை முகத்தில் போட்டுக்கொண்டால் பளிச்சென்று இருக்கும்.
*முகம் புத்துணர்வோடு இருக்க கேரட், ஆரஞ்ச், தேன் மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து கலவையாக தயாரித்து முகத்தில் பூசிக்கொள்ளலாம். அன்றாடம் இரண்டு அல்லது மூன்று முறை குளிக்க வேண்டும். குளியல் பொடி, கடலைமாவு, பாசிப்பயறு, மஞ்சள்வெட்டிவேர் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
*ேஹர்டை பயன்படுத்துவோர், வெயிலில் செல்லாமல் இருப்பது நல்லது. கோடை முடியும் வரை இயற்கையாக கிடைக்கும் ெஹன்னாவை ேஹர் டையுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
'குட்டீஸ்' களுக்கு...:
*குழந்தைகளுக்கு தடுப்பூசி அட்டவணைப்படி, விடுபடாமல் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். காலை எழுந்தவுடன், காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யை தலை, கை, கால் கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் நன்கு தேய்த்துவிட வேண்டும்.
*குழந்தைகளை காலை - மாலை இரு வேளைகளிலும் குளிக்க வைக்க வேண்டும். வெள்ளை நிற பருத்தி ஆடைகளை, காற்றோட்டம் இருக்கும்படியாக (டைட் கூடாது) அணிவிக்க வேண்டும். 'பிரிட்ஜ்' தண்ணீர் தரவே கூடாது. வெயிலில் அழைத்துச் செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
* தொடர்ந்து வெயிலில் குழந்தைகளை வாட்டினால், அம்மை நோய் பாதிக்கும் வாய்ப்புள்ளது. அம்மைத் தடுப்பூசிகள் போடாமல் இருந்தால் அவற்றை போட்டுக்கொள்வது நல்லது.
* மாலை நேரத்தில் குழந்தையை வாக்கிங் அழைத்து செல்லலாம். குளிர்பானம், கடையில் சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட பழரசம், புளித்தபால், காய்ச்சாத பால், காய்ச்சாத பாலில் தயாரிக்கப்படும் ரோஸ் மில்க், மில்க் ேஷக் ஆகியவற்றை தரக்கூடாது.
* சுகாதாரமில்லாமல் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள், தர்பூசணிக் கடைகள், ஜூஸ் சென்டர்களில் தயாரிக்கப்படும் பானங்களை தவிர்க்க வேண்டும். ஈ மொய்க்கும் பழங்களை சாப்பிடக்கூடாது.
நன்றாக குளிங்க; அதிகமா குடிங்க!
தோல் நோய் டாக்டர் சங்கர் கூறியதாவது: உடலின் மேற்புறத் தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகளில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வியர்வை சேர்ந்து உடலில் அழுக்கு ஏற்படக்கூடாது; அன்றாடம் குளிப்பது அவசியம்.உடலை தண்ணீரால் முழுமையாக நனைத்து நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்; இதன்காரணமாக இரு வகை சுரப்பிகளும் நன்றாக செயல்படும். வெக்கை நோய் ஏற்படாமல் இருக்க உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், உணவுகளை உட்கொள்வது அவசியம். தண்ணீர் அதிக அளவு குடிப்பதால் வெக்கை நோயிலிருந்து விடுபடலாம்.வெயிலில் அதிகம் சுற்றக்கூடாது; உடலை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. இவ்வாறு, சங்கர் கூறினார்.
எதை சேர்க்கலாம்:
*அதிக நார்ச்சத்துள்ள புடலை, பீர்க்கன், பூசணி, அரசாணி, வெண்டை, முள்ளங்கி, நுால்கோல், டர்னிப் ஆகிய காய்கறிகள்; பாலக்கீரை, புதினா, மல்லி, வெந்தயம், முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, சிகப்புக்கீரை, மணத்தக்காளி, முருங்கை கீரை வகைகளை வாரத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
*பழங்களில் சப்போட்டா, தர்பூசணி, ஆரஞ்சு, இளநீர், நுங்கு, முலாம்பழம், சாத்துக்குடி, கொய்யா, மாதுளை, பன்னீர்திராட்சை, பச்சை திராட்சை, பதநீர், பெரியநெல்லிக்காய், வெள்ளரிப்பழம், செவ்வாழை,ரொபஸ்டா, கற்பூரவள்ளி, ரஸ்தாளி, பூவன், விருப்பாச்சி மோரீஸ் ஆகியவற்றை சாப்பிடலாம்.
*ஈர மணலில் மீது மண் பானை வைத்து, கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரை அதில் ஊற்றி வைத்து பருகலாம். குளிர்ச்சியாகவும், பாதுகாப்பான குடிநீராகவும் இருக்கும்.
*உஷ்ணம் குறைய, மோர் உடன், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் சேர்த்து குடிக்கலாம். தயிர், எலுமிச்சை ஜூஸ், பாதாம் கீர் குடிக்கலாம். தயிர்சாதம், கம்பங்கூழ், ராகிகூழ், களியோடு சேர்த்த தயிர் அல்லது கீரை சாப்பிடலாம். ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், ஆப்பம், சேவை, கொழுக்கட்டை, பணியாரம் சாப்பிடலாம். தோசை, ரோஸ்ட், பூரி, சப்பாத்தி, பரோட்டாவை தவிர்க்கலாம்.
எதை தவிர்க்கலாம்:
*உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் பலாப்பழம், மாம்பழம், மற்றும் அன்னாசி பழத்தை தவிர்க்கலாம். ரெடிமேடாக தயாரிக்கும் அல்லது தாளித்து வைக்கும் புளிச்சாதம்,
தக்காளி, லெமன், வெஜிடபிள் பிரியாணி, மல்லிசாதம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
*'பாஸ்ட் புட்' வகையைச் சேர்ந்த தந்துாரி, பேல்பூரி, பானி பூரி, மசால் பூரி, காளான், சாட் வகைகள், பாவ்பாஜி போன்றவற்றை தவிர்க்கலாம். முட்டையில் வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடலாம். கோடையில் இறைச்சியை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
*பீட்சா, பர்கர், பப்ஸ், முருக்கு, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் டீ, காபி உள்ளிட்ட அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
*வெயிலில் சென்று திரும்பியவுடன், கண்களை குளிர்ந்த சுத்தமான தண்ணீரில் இரு முறை கழுவ வேண்டும். அவ்வப்போது 'ஐஸ் வாட்டரில்' நனைத்த சுத்தமான துணியை கண்களில் ஒத்தி எடுக்கலாம்.
*தொடர்ந்து உஷ்ணக்காற்றை சுவாசிப்பதால், மூக்கின் இரு துவாரங்களும் வறண்டு துாசு படிந்து காணப்படும். முகம் கழுவும்போது ஒரு மூக்கை அடைந்து மறு மூக்கை
சிந்தவேண்டும். இதேபோல் மற்றொரு மூக்கிலும் செய்ய வேண்டும்.
*குளிர்ந்த துணியால் மூக்கின் மேற்பகுதியில் பரப்பி கொஞ்சம் ஆசுவாசப்படுத்த வேண்டும்.
*கை மற்றும் விரல்களை துாய்மையாக வைத்திருப்பது அவசியம். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, வெண்மை நிற கை உறைகளை பயன்படுத்தலாம். *நாளொன்றுக்கு நான்கு முறை கைகளை கழுவுவது அவசியம்.
*நாளொன்றுக்கு நான்கு லிட்டர் தண்ணீரை தகுந்த இடைவெளியில் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, நீரழிவுநோய் இருப்பவர்கள் டாக்டரின் ஆலோசனை பெறவேண்டும்.
*கழுத்தின் வெளிப்பகுதியைச் சுற்றிலும் வியர்வை சேர்ந்து கருப்புத்தட்டும். குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் மஞ்சள் மற்றும் பயத்தமாவு, ரோஸ் வாட்டர் ஆகியவை சேர்த்து, கழுத்துப்பகுதியை சில நிமிடங்கள் தேய்த்து கழுவ வேண்டும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H