Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தலைப்பு :முடியுமென நம்பு!
"இன்று நீ உரைப்பதெல்லாம் உளறல்கள் ஆகலாம்! ஒருநாள் உன் உளறல்கள் கூட தலைப்புச் செய்திகளாகும்! இன்று நீ எழுதுவதெல்லாம் கிறுக்கல்கள் ஆகலாம்! ஒருநாள் உன் கிறுக்கல்கள் கூட தேசிய கீதங்களாகும்!
முடியுமென நம்பிய ஒரு முட்டாள் சிறுவனின் முயற்சிதான் ஒருநாள் நியூயார்க் நகரையே மின்னொளியில் மிதக்கச் செய்தது! அவன் தாமஸ் ஆல்வா எடிசன்! அவன் விடாமுயற்சியின் சன்! அதனால்தான் அறிவியலில் அவன் தொட்டதெல்லாம் வின்!
பறவையைப் போல் மனிதனும் வானில் பறக்க முடியுமென நம்பிய ரைட் சகோதரர்கள் பின்னாளில் விமானத்தை கண்டுபிடித்து, வான வெளியெங்கும் பறந்து விண்மீன்களை வியக்க வைக்கவில்லையா?
விடாது முயன்றால், எந்த சாதனைதான் நம்மைத் தொடாது சென்றுவிடும்! கல்விப்பணியால் தான் வாழும் சமுதாயத்தை உயர்த்திட கனவுகள் கண்டதோடு நின்று விடாமல், ஒரு திரையரங்கை திசையன்விளையின் ஆக்ஸ்போர்டாய் மாற்றியது திரு. ஜேஸ்பர் டேனியல் அய்யா அவர்களின் விடாமுயற்சி அல்லவா? தந்தையின் பணியை திறம்பட தொடரும், மகனின் சிந்தை அதைவிட அல்லவா வேகம்! விடா முயற்சியில் இவர்கள் எடிசனின் இரண்டாம் பாகம்! காரணம் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும், டேனியல் தாமஸ் நிறுவனர்களுக்கும் எப்போதுமே புதியனவற்றை கண்டறிந்து சாதிப்பதில் அவ்வளவு தாகம்!
அன்புத் தம்பியே! அன்பு தங்கையே! தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் ஏப்ரல் மாதத்தில் உன்னை சரியான தலைப்போடுதான் சந்திக்க வந்திருக்கிறேன்! தெரிந்து கொள்! நெப்போலியன் நித்திரை போனது கூட ஓடுகின்ற குதிரையில்தான்! ரஜினியைப் போல் உயர வேண்டுமென்ற உத்வேகம் உனக்கு இருந்தால், கஜினியைப் போல் படையெடுக்கவும் நீ தயங்கக் கூடாது! தான் கொண்ட துறையில் கலந்து போய், கரைந்து போய், காணாமல் போனவர்களே சிகரம் தொட்டிருக்கிறார்கள்! ஐன்ஸ்டீன் தன் சொந்த வீட்டு முகவரியை கூட மறந்து விட்டு தெருத் தெருவாய் அலைந்தவர்தான்! அதனால்தான் இன்று இயற்பியல் அவரை தன் இதயத்தில் பச்சை குத்தியிருக்கிறது!
முடியுமென நம்பு! உன் முதுகெலும்பில் உள்ளது இமயத்தையே தாங்கும் தெம்பு! சந்திக்க நேரலாம் எத்தனையோ வாலிப வம்பு! அதையெல்லாம் அடித்து விரட்ட கையிலெடு விடாமுயற்சியென்னும் கம்பு!
நெம்புகோல் தத்துவத்தை கண்டறிந்த பின்னர் நியூட்டன் நெஞ்சை நிமிர்த்திச் சொன்னானாம் இப்படி! " இந்த பூமிக்கு வெளியே கால் வைக்க மட்டும் எனக்கொரு சிறு இடமிருந்தால் நானிந்த பூமியையே எனது நெம்புகோல் தத்துவத்தைப் பயன்படுத்தி புரட்டி விடுவேன்! "
நான் சொல்கிறேன் "இந்த பூமியையே புரட்டிவிடும் அந்த நெம்புகோல் நீயடா! என் அன்புத் தோழனே! "
உனக்கு உத்வேகம் தரவே இவையெல்லாம் எழுதினேன்! ஆனாலும் ஒரு உண்மையை மறைக்க விரும்பவில்லை! "குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாகும்! ஜெயமோ கர்த்தரால் வரும்! " இயேசுவே கடவுள் என்பதும், அவரைப் பற்றி எழுதுவதும் எத்தனையோ பேருக்கு எரிச்சலாய் இருக்கலாம்! ஆனால் அந்த திமிர்தான் எனக்குத் தெம்பாயிருக்கிறது! என் தேவன் இயேசுவை விடாது பற்றிக் கொண்டிருப்பபதை விடவும், சிறந்த விடாமுயற்சி வேறெதுவும் இருப்பதாய் நான் கருதவில்லை!
"தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் " என்று சொன்ன வள்ளுவனோடு கைகொடுக்க முடியாது எனக்கு! காரணம் "என் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை "
ஒரு உண்மைச் சம்பவத்தைக் கூறி முடிக்கிறேன்! கவனமாகக் கேள்! அவர் ஒரு மிகச் சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்! பைபாஸ் சர்ஜரி செய்வதில் பலே கில்லாடி! அவரிடம் ஒருமுறை ஒரு பத்திரிக்கையாளர் கேட்கிறார்! " Doctors are the second Gods என்பார்கள்! ஆனால் நீங்கள் உண்மையிலேயே கடவுள்! ஒரு மனிதனின் இதயத்தையே எவ்வளவு எளிதாக நிறுத்தி விட்டு அறுவை சிகிச்சை செய்கிறீர்கள்! "
அதற்கு அந்த டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னாராம்! "நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்! நான் ஒரு மனிதனின் நெஞ்சை பிளந்து, இதயத்தையே செயற்கை சுவாசம் கொடுத்து நிறுத்தி விட்டு, ஆபரேசன் செய்து, எல்லாவற்றையும் தைத்து விட்டு வந்து விடுகிறேன்! ஆனால் அதன் பிறகு அந்த மனிதனை உயிரோடு எழுப்புவது நிச்சயம் என் கையிலில்லை! அது இறைவனின் கையில்தான் உள்ளது!
ஆம்! அன்புத் தம்பியே! இப்போது புரிகிறதா? விடாமல் நீ முயன்றால், இந்த பூமியும், அதையே நம் தேவனோடு முயன்றால் அந்த சொர்க்கமும் உன் வசப்படும்!
நேற்று வானை ரசித்துப் பார்த்தாய்! இன்று வானில் வசித்துப் பார்க்கிறாய்! நாளை அந்த சூரியனையே சுடச்சுட ருசித்துப் பார்க்கப் போகிறாய்!
வாழ்த்துக்கள்!
Bro. T.S .Michael,
திசையன்விளை!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








