10ஆம் வகுப்பு கணிதத்தேர்வு (04.04.2016) இன்று நடந்து முடிந்தது.இதில் 1 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புத்தகத்திற்கு பின்புறம் உள்ள வினாக்கள் இடம்பெற்றன.இரண்டு மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெறவில்லை.இரண்டு creative கேள்விகள் இடம் பெற்றது.அதில் ஒன்று கேள்வி எண் 26 பத்தாம் வகுப்பு மாணவர்களின் நிலையில் கேட்கப்படவில்லை.5 மதிப்பெண் வினாவை பொருத்தவரை கணங்களும் சார்புகளும் பகுதியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு ஏற்ற கேள்விகள் இடம் பெறவில்லை.வழக்கமான வர்க்க மூலம்,பகடை சார்ந்த கணக்குகள் என மொத்தத்தில் 20 மதிப்பெண்கள் இடம்பெறவில்லை.பத்து மதிப்பெண்கள் வினா எண் 45(அ ) வில் இடம்பெற்ற graph தவறாக இடம் பெற்றுள்ளது.ஆக மொத்தம் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு கணிதத்தேர்வு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு கடினமே..
கல்விக்குரல் Centum Team வழங்கிய கேள்வித்தாள்கள்,Study Materials அனைத்தும் தெளிவாக படித்திருந்தால் Centum நிச்சயம் பெறமுடியும்.கல்விக்குரல் வெளியிட்ட கட்டாய வினாக்கள் தொகுப்பில் இருந்து கட்டாய வினா இடம்பெற்றது, மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தவறான வினாவிற்கு மதிப்பெண்கள் எதிர்பார்க்கின்றனர் வழங்குமா கல்வித்துறை காத்திருப்போம்.ஆக்கம் கல்விக்குரல் 10th Mathematics Centum Team.







