Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
125 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த கோடைக் காலத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.
இந்த மாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமைகளில் பல இடங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் உயர்ந்தது.
கடும் வெப்பம் காரணமாக சாலையில் கானல்நீர் தோன்றியதோடு,
அனல் காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.
முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் வீடுகளுக்குள் முடங்கினர்.
வெட்டவெளியில் வேலை செய்ய வேண்டிய கூலித் தொழிலாளர்கள்
தங்களது பணிகளைச் செய்ய முடியாமல் தவித்தனர். அதிக வெப்பத்தால் பல சாலைகள்
வெறிச்சோடி காணப்பட்டன. அதிக வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர்
ஒருவர் கூறியதாவது: பசிபிக் பெருங்கடலில் கடல்நீரில் ஏற்படும் வெப்ப
மாற்றத்தால் எல் நினோ எனப்படும் பருவநிலை மாற்றத் தாக்கம் உலகின் பல்வேறு
பகுதிகளிலும் நிலவி வருகிறது. இதனால் மழைப்பொழிவு அதிகமுள்ள இடங்களில்
வறட்சியும், பாலைவனங்களில் மழைப்பொழிவும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சீனா, ஜப்பான் நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் பருவநிலை மாற்றத்தால்
நிகழாண்டில் வெப்பநிலை மிகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம்
பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நிகழாண்டில் இந்தியாவில்
அதிகபட்சமாக 125 டிகிரி ஃபாரன்ஹீட் வரை சில பகுதிகளில் வெப்பம் பதிவாகும்
என எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மாற்றத்துக்கு ஏற்ப பொதுமக்கள்
வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைந்து போகும்.
இதனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், சிறுநீர் கடுப்பு உள்ளிட்டவை அதிகளவில்
ஏற்படும். இதற்கு பழங்களை அதிகளவில் உணவில் சேர்ப்பதே சிறந்ததாகும்.
வழக்கமாக குடிக்கும் தண்ணீரின் அளவை சுமார் 2 லிட்டர் வரை அதிகரிக்க
வேண்டும். பதநீர், இளநீர், கரும்புச்சாறு, கம்பங்கூழ் போன்ற பாரம்பரிய
உணவுகளைச் சேர்க்கலாம். வெந்தயம், சின்னவெங்காயம், மோர் போன்றவற்றை மதிய
உணவு வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி, கிர்னி பழம்,
வாழைப்பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்றார் அவர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








