'தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. எனினும்,
கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம்
அறிவித்துள்ளது.
நேற்று, ஈரோடு நகரில், 107.6; வேலுார்,
திருச்சியில், 104; மதுரை, சேலம், நெல்லையில், 102; கோவையில், 100.4
டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது. சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம்,
நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் இந்த அளவு
இல்லை என்றாலும், 95 டிகிரி பாரன்ஹீட்டை எட்டி உள்ளது.
இந்த மாதத்தின் இறுதி வாரத்தில், கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மேலும்
அதிகரிக்கலாம்.
வானிலை ஆய்வு மையம், ஏப்., 16 வரையிலான வானிலை குறித்து, நேற்று வெளியிட்ட
அறிக்கை: வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,
கரூர், திருப்பூர், நீலகிரி, கோவை, திருச்சி, அரியலுார், பெரம்பலுார்,
விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில், இன்றும், 16ம்
தேதியும், மழை அல்லது இடியுடன்
கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட
மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும்.ஏப்., 14,
15: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.இவ்வாறு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது







