ஸ்ரீஹரிக்கோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண்
விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை பகல் 12.50 மணிக்கு
பி.எஸ்.எல்.வி. சி 33 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தொடர்ந்து விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இந்திய
விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7
செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 6
செயற்கைக்கோள்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து கடைசி மற்றும் 7
வது செயற்கைக்கோள் ஏவுவதற்கான இறுதிகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில்
ராக்கெட்டு ஏவுவதற்கான கவுண்ட் டவுண் நேற்று முன்தினம் காலை தொடங்கியது.
பி.எஸ்.எல்.வி.
சி33 ராக்கெட் பகல் 12.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 598
கிலோ எடை கொண்டது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி செயற்கைகோள் இந்தியாவிலேயே
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும். இந்த
செயற்கைக்கோள் மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார்
செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.
பிரதமர் பாராட்டு:
பிரதமர் மோடி கூறியதாவது:
ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு
பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது நாட்டு மக்கள் அனைவருக்கும்
இஸ்ரோ வழங்கிய பரிசாகும். அறிவியல் தற்போது கடலில் மீனவர்களுக்கு உதவும்.
ஜி.பி.எஸ்., சேவையை மற்ற நாடுகளும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த
ராக்கெட் இந்தியாவில் இந்தியாவால் உருவாக்கப்பட்டது. இந்த ஜி.பி.எஸ்.,
சேவைக்கு நாவிக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் சொந்தமாக
ஜி.பி.எஸ்., வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும்
இணைந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது
எனக்கூறினார்.