அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில்
சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர்
பதிவிறக்கம் செய்துள்ளனர்.2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல்
சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்து விண்ணப்பிக்கும்
நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.
ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான ஆன்-லைன் பதிவு தொடங்கியது. பி.இ. படிப்பில்
சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை (மே
31) கடைசி நாளாகும்.1,76,836 பேர்: ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப்
பதிவிறக்கம் செய்த 2,45,217 பேரில், 1,76,836 பேர் கட்டணத்தைச்
செலுத்தியுள்ளனர்.பூர்த்தி செய்த விண்ணப்பம் வந்து சேர ஜூன் 4 கடைசி:
பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்
சேர்க்கை செயலருக்கு வந்து சேர ஜூன்4-ஆம் தேதி கடைசி நாளாகும்.ஜூன் 20-ஆம் தேதிக்கு மேல் கலந்தாய்வு:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச்
சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கிய சில தினங்களில் பி.இ. பொதுப் பிரிவு
கலந்தாய்வு தொடங்கும் நடைமுறை உள்ளது. எனவே, பி.இ. கலந்தாய்வு ஜூன் 20-ஆம்
தேதிக்குப் பிறகு தொடங்கும்.







