தமிழகத்தில் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்க உள்ள நிலையில்,
மாணவர்களுக்கான பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான இணைய திட்டத்தை,
முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, தேர்தல் பிரசாரத் தின் போது கூறிய பல வாக்குறுதி களை, ஜெயலலிதா உடனடியாக நிறைவேற்றுவார் என, தகவல் வெளியாகியுள்ளது. அரசிடமிருந்து, இலவச, 'லேப் டாப்' பெறும் மாணவர்களுக்கு, '4ஜி' இலவச இணைய இணைப்பு வழங்கும் திட்டமும், உயர்கல்விக்கான, 'க்ளவுட் கம்ப்யூட்டிங்' என்ற மேக கணினியக திட்டமும், முதல் கட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.இதுதவிர, கல்விக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்பதால், கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள், மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.-








