வீட்டு செல்லப் பிராணிகளிடம் வழக்கம்போல் கொஞ்ச வேண்டாம்; வெயில்
வறுத்தெடுப்பதால், அவை மன ரீதியான பாதிப்பால், கடித்து குதறவும்
வாய்ப்புள்ளது' என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய பொது சுகாதார சங்கத்தின், தமிழக தலைவர் இளங்கோ கூறியதாவது:
வெப்ப
தாக்கத்தால், தோல் வியாதி, சிறுநீர் பிரச்னை, கண் எரிச்சல், உடல் சோர்வு,
மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். முடிந்த அளவு, வெயில்
நேரத்தில் வெளியே வர வேண்டாம்.
கட்டாயம் வெளியில் செல்ல நேர்ந்தால்,
குடை, தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வதை கவுரவ குறைச்சலாகக் கருத
வேண்டாம். தினமும், 5 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
வெயில் உக்கிரம்
காரணமாக, விலங்குகளும் பாதிக்கப்படும். அவற்றின் செயல்பாடுகள் வழக்கத்தை
விட மாறுபடும். எப்போதும்போல், வீட்டில் உள்ள நாய், பூனைகளை கொஞ்ச
வேண்டாம். அவை உங்களை கடித்து, குதற வாய்ப்புள்ளது. அந்த அளவுக்கு உடல்
ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.







